லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர், மாணவி பலி... காவல் துறையினர் விசாரணை!
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அருகே பைக்கில் ஆண் - பெண் நண்பர்கள் இருவர் சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது இவர்களது வண்டி மோதியுள்ளது.
சென்னை, பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பைக் - லாரி மோதி விபத்து
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அருகே பைக்கில் ஆண் - பெண் நண்பர்கள் இருவர் சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது இவர்களது வண்டி மோதியுள்ளது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பைக் ஓட்டிச் சென்ற ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பின்னால் அமர்ந்து வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தனியார் கல்லூரி மாணவர்கள்
இந்தச் சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
தொடர்ந்து அங்கு விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுளா சுருதி (20), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அக்ஷதா குமார்(18) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இருவரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க...
திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது
புதுச்சேரி: டைமிங் பிரச்னையால் அரசு பேருந்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் - பயணிகள் அவதி
Video : இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவனின் பெற்றோர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்