அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதலில், தெஹ்ரானின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
USA Iran Casualities: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதலில், பள்ளி மாணவிகள் சுமார் 160 பேர் உட்பட 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

USA Iran Casualities: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதலில், தெஹ்ரானின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வெடித்துள்ள போர் சூழலால், நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நாடுகள் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், அமெரிகா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஹர்மூஸ் கணவாய் மூடப்பட்டதால் எரிபொருட்களின் விலையும் எகிறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
48 தலைவர்கள், 9 கப்பல்கள் காலி
இதனிடையே, கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் 48 ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 9 கப்பல்கள் சிதைக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள கப்பல்களை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் தாக்குதலுக்கி ஆளாகியுள்ளன. எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த ராணுவ நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் பேசியுள்ளார். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவ நடவடிக்கை முடியும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அமெரிக்காவிற்கான அவரது தியாகத்திற்கு எனது பாராட்டுகள் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
160+ மாணவிகள் பலி:
இதனிடையே, ஈரானில் நடத்தப்படும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ தாக்குதலில், தற்போது வரை 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதில், மினாபில் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில், 160-க்கும் அதிகமான மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 96 பேர் காயமடைந்துள்ளனராம். அப்பகுதியில் இருந்த ஈரானின் ராணுவ தளத்தை குறிவைத்தபோது, அருகே இருந்த பள்ளி பெரும் சேதத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த சம்பவம் ஈரான் மக்களை உலுக்கி எடுத்துள்ளது. பொதுமக்களும் 30-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வாய் திறக்காத உலக நாடுகள்:
ஈரான் மக்களின் உரிமைகளை நசுக்குவதகாவும், போராட்டங்களை ஒடுக்குவதாகவும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியே இந்த ராணுவ தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அப்பாவி மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களை கொன்று குவித்தது குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இதுவரை இரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்கப்படவில்லை. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பல உலக நாடுகள் கூட, பள்ளி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குடலுக்கு வேதனை கூட தெரிவிக்கவில்லை. மக்களின் நலன் என்பதை தாண்டி ஒரு சிலரின் அதிகார பசியே இந்த ஆயுத மோதல்களுக்கு காரணம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
Frequently Asked Questions
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதலில் யார் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்?
கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் எத்தனை ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்?
கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் 48 ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ தாக்குதலில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ தாக்குதலில், இதுவரை 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்ததாகவும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் எத்தனை அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்?
ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
























