மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய வாழ்வா சாவா போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 195 ரன்கள் என்ற இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் கடைசி மற்றும் நான்காவது அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson IND Vs WI: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு சென்ற பிறகு சஞ்சு சாம்சன் மைதானத்திலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

Sanju Samson IND Vs WI: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிராக வான்கடே மைதானத்தில் அரையிறுதிபோட்டியில் களமிறங்க உள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி:
ஐசிசி டி20 உலகக் க்கோப்பையின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான, வாழ்வா சாவா போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த எதிரணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி சேஸ் செய்த மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும். இதன் நடப்பு டி20 உலகக் கோப்பையில் கடைசி மற்றும் நான்காவது அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
சஞ்சு சாம்சன் அபாரம்
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 50 பந்துகளில் 97 ரன்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். எந்தவித அவசரமும், தடுமாற்றமும் இன்றி இன்னிங்ஸ் முழுவதும் களத்தில் நின்று,சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். கடைசி ஒவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் இரண்டு பந்துகளையும் சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு விளாசி அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார். டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரால் எட்டப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவரது பங்களிப்பை இந்திய அணியின் நட்சட்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கோலி உள்ளிட்ட பலரும், பாராட்டியுள்ளனர்.
The range of shots Sanju Samson played was just brilliant. He smashed 4 sixes but more importantly scored 12 fours & played very less dot balls.
— JJ (@IdliHaterrr) March 1, 2026
As a Kohli- Sanju mutual fan, I really missed such chases in T20i. pic.twitter.com/kagDMVIZ3j
வீடியோ வைரல்:
இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததுமே ஆடுகளத்திலேயே, முழங்கால்களில் அமர்ந்து வானத்தை நோக்கியபடி, ஏக்கத்துடன் இறைவன் இயேசுவை வணங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் இடம்பெறுவதே முதலில் கேள்விக்குறியாக இருந்தது. பின்பு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. விளையாடிய முதலில் இரண்டு போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. ஆனால், மிகவும் இக்கட்டான நேரத்தில் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்த சாம்சனிற்கு இது ஒரு மிகப்பெரிய தருணம் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இந்தியாவின் அரையிறுதி எங்கு? எப்போது? யாருடன்?
இந்தியா தனது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் மார்ச் 5ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக வரும் 4ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில், தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு அரையிறுதியிலும் வெற்றி பெறும் அணிகள், மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன.
Frequently Asked Questions
இந்திய அணி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு எப்படி தகுதி பெற்றது?
அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடுகிறது?
இந்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் மார்ச் 5ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் பங்களிப்பு என்ன?
சஞ்சு சாம்சன், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். இது டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரால் எட்டப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்தியாவின் அரையிறுதிப் போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
இந்தியாவின் அரையிறுதிப் போட்டி மார்ச் 5 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும்.





















