Video : இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவனின் பெற்றோர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
டெல்லியில் இளம் பெண்ணை மாடியில் இருந்து கணவர் வீட்டார் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மயூர் விஹார் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் இளம் பெண்ணை மாடியில் இருந்து கணவர் வீட்டார் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மயூர் விஹார் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் சகோதரர் ட்விட்டரில் தன் சகோதரியின் வாக்குமூலத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். அப்போது என் கணவர் வீட்டார் என்னை கீழே தள்ளிவிட்டனர். நான் தெருவில் வீழ்ந்துவிட்டேன் என்றார்.
அந்தப் பெண்ணின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கிழக்கு மாவட்ட துணை கமிஷனர் பிரியங்கா காஷ்யப் வழக்குப் பதிவு செய்து விசார்ணையை தொடங்கியுள்ளார். கொலை முயற்சி 307 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
இளம் பெண்ணின் சகோதரர் பகிர்ந்த வீடியோவை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவாலும் பகிர்ந்துள்ளார். அவர் டெல்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரிய நிலையிலேயே கிழக்கு டெல்லி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
दिल्ली के मयूर विहार में 30 साल की महिला को सुबह 3 बजे उसके ससुराल वालों ने छत से फेंका। उसके भाई ने 181 पे कॉल कर हमको ये विडीओ भेजी है। लड़की की हालत बहुत नाज़ुक है। मैं दिल्ली पुलिस को नोटिस इशू कर रही हूँ FIR दर्ज करने, अरेस्ट करने और MM के सामने लड़की के बयान करवाने के लिए! pic.twitter.com/XuX6kdsfJf
— Swati Maliwal (@SwatiJaiHind) June 18, 2022
விஸ்மயா வழக்கு:
கேரளாவையே உலுக்கிய ஆயூர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா மர்ம மரண வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அதிகாலையில் அவரது மாமியார் வீட்டில் மாணவி விஸ்மயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை:
சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டார் கூறினர். 3 ஆம் ஆண்டு திருமண நாளன்று வரதட்சனை கொடுமையால் மனைவியை கணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தது பின்னர் அம்பலமானது.
மார்க்சிஸ்ட் அறிக்கை:
வரதட்சணைக் கொடுமைகள் டெல்லி, கேரளாவில் என்று வெளி மாநிலங்களில் தான் நடக்கிறது என்று நாம் நினைத்தோமேயானால், அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையைப் படிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாகவே, குடும்ப வன்முறைகள் மிக மோசமாக இருந்தை குடும்ப நல ஆய்வு விபரங்கள் காட்டியிருந்தன. இப்போது சவீதா மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்துறை மேற்கொண்டிருக்கும் ஆய்வில், இளம் குடும்பங்களில் நிலவும் கடுமையான சூழல் பற்றிய கூடுதல் விபரங்கள் வந்துள்ளன.
அதன்படி, வன்முறைக்கு ஆளாகும் குடும்பங்களின் சதவீதம் 38.7 ஆகும். அவர்களில் உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொள்வோர் 28.7%, பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1%, உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6% ஆகும். இந்த விபரங்கள் அனைத்துமே 30 வயதை எட்டாத இளம் பெண்கள் தெரிவித்தவை.
திருமணத்திற்கு பின் ஒருமுறையாவது உடல் ரீதியிலான தாக்குதலை எதிர்கொண்இருப்பதாக 28.7 சதவீதம் பேர் தெரிவித்திருக்கிறார். நண்பர்களை சந்திக்க முடியாத நிலைமை இருப்பதாக 10.6 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். சுய மரியாதைக் குறைவாக நத்தப்படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சையை நாட நேர்ந்திருப்பது பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பது இந்த ஆய்விலும் தெரிய வந்துள்ளது. படித்த பெண்கள் மத்தியிலும், பொருளாதார ரீதியாக சுயமாக முடிவு மேற்கொள்வோரும் வன்முறைகு ஆளாவது குறைவாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என சில நாட்கள் முன் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தோம். அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அதில் பட்டியலிட்டிருந்தோம். அதனை மீண்டும் வற்புருத்திட விரும்புகிறோம்.
குடும்ப வன்முறைக்கு எதிரான தீவிர பிரச்சாரம் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, குடும்ப வன்முறைக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.