Crime : நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டிய ரயில்வே ஊழியர்..! தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்..! நடந்தது என்ன..?
நிர்வாண புகைப்படங்களை காட்டி ரயில்வே ஊழியர் மிரட்டியதால் திருச்சியில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருச்சியில் மாவட்ட ஆயுதப்படை போலீசில் 30 வயது பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். பெண் போலீசின் உறவினர் 40 வயதான ஸ்டாலின். இவர் திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கணவரை இழந்து தனியாக வசித்து வந்த இளம் பெண் போலீஸ், ரயில்வே ஊழியரான ஸ்டாலினும் திருச்சியில் பணியாற்றி வந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அப்போது, இளம்பெண் போலீசை வலுக்கட்டாயப்படுத்தி ஸ்டாலின் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த இளம்பெண் போலீசை வலுக்கட்டாயப்படுத்தி ரயில்வே ஊழியர் ஸ்டாலின் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், அந்த புகைப்படங்களை அடிக்கடி பெண் போலீசிடம் காட்டி பல முறை அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மிரட்டி அவர் உடலுறவில் ஈடுபட்டு வந்ததால் பெண் போலீஸ் மனமுடைந்துள்ளார். இந்த சூழலில், கடந்த 20-ந் தேதி ஸ்டாலின் பெண் போலீசிடம் அவரது நிர்வாண புகைப்படங்களை காட்டி ரூபாய் 20 ஆயிரம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். பணம் தராவிட்டால் ஆபாசபடங்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய பெண் போலீஸ் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெண்போலீஸ் வீட்டில் மயங்கிக்கிடப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் ரயில்வே ஊழியர் ஸ்டாலின் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இளம்பெண் போலீசை ரயில்வே ஊழியர் ஆபாச படங்களை காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்