மேலும் அறிய

Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

Car Sale Feb 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா, டாடாவை பின்னுக்கு தள்ளி, மாதாந்திர கார் விற்பனையில் ஹுண்டாய் நிறுவனம் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Car Sale Feb 2026: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 63 ஆயிரத்து 331 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

பிப்ரவரி மாத கார் விற்பனை விவரங்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் விற்பனை என்பது தொடர்ந்து சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதமும் பல நிறுவனங்களுக்கு நல்ல விற்பனை பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டாடா நிறுவனம் 35 சதவிகிதமும், ஹுண்டாய் நிறுவனம் 12. சதவிகிதமும், கியா நிறுவனம் 10. சதவிகிதமும், மஹிந்த்ரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 18 சதவிகிதமும், மாருதி நிறுவனம் 11.1 சதவிகிதமும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. யூனிட்கள் அடிப்படையில் மாருதி தொடர்ந்து முதலிடம் வகிக்க, ஹுண்டாய் இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ளது.

விற்பனையில் அசத்திய டாப் 5 ப்ராண்ட்கள்

6. கியா குதூகலம்

தென்கொரிய நிறுவனமான கியா கடந்த பிப்ரவரி மாதத்தில் 27 ஆயிரத்து 610 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 25 ஆயிரத்து 26 யூனிட்களை விட 10.3 சதவிகிதம் அதிகமாகும். செல்டோஸ் மற்றும் சோனெட் ஆகிய கார் மாடல்கள் ப்ராண்ட் தரப்பில் அதிகம் விற்பனையான கார் மாடல்களாக உள்ளன. எஸ்யுவி, எம்பிவி மற்றும் மின்சார கார் என மொத்தம் 9 மாடல்கள் ப்ராண்ட் சார்பில் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னோவா ஹைக்ராஸ் ப்ராண்டின் விற்பனையில் முதன்மையான மாடலாக மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

5. டொயோட்டா பிப்ரவரி மாத விற்பனை:

டொயோட்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 34 ஆயிரத்து 34 யூனிட்கள் டொயோட்டா நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டிலேயே 30 ஆயிரத்து 737 யூனிட்கள் விற்பனையாக, 3 ஆயிரத்து 297 யூனிட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 28 ஆயிரத்து 414 யூனிட்களை காட்டிலும் 20 சதவிகிதம் அதிகமாகும். ஹேட்ச்பேக், செடான், எஸ்யுவி என மொத்தம் 12 கார் மாடல்கள் டொயோட்டா சார்பில் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.




Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

4. மஹிந்த்ரா எஸ்யுவிக்கள்

மஹிந்த்ரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 97 ஆயிரத்து 177 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், அதில் 60 ஆயிரத்து 18 வாகனங்கள் மட்டுமே பயணிகள் வாகமனமாகும். இது கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவான 50 ஆயிரத்து 420 யூனிட்களை காட்டிலும் சுமார் 19 சதவிகிதம் அதிகமாகும்.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியானது 11 சதவிகிதம் அதிகரித்து 3 ஆயிரத்து 384 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.  கடந்த மாதத்தில் ப்ராண்டின் சார்பில் அதிகம் விற்பனையான மாடலாக ஸ்கார்பியோ ரேஞ்ச் திகழ்கிறது. எஸ்யுவி மற்றும் மின்சார கார்கள் என ப்ராண்ட் சார்பில் மொத்தம் 16 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

3. டாடாவின் விற்பனை விவரம்

டாடா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 63 ஆயிரத்து 331 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 46 ஆயிரத்து 811 யூனிட்களை காட்டிலும் 35 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. ப்ராண்ட் சார்பில் அதிகபட்சமாக நெக்ஸான் 19 ஆயிரத்து 430 யூனிட்களும், பஞ்ச் 18 ஆயிரத்து 748 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. செடான், ஹேட்ச்பேக், எஸ்யுவி மற்றும் மின்சார வாகனங்கள் என 15 முதல் 16 மாடல்கள் நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. 


Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

2. ஹுண்டாய் கார் மாடல்கள் விவரம்

கடந்த சில மாதங்களாக விற்பனையில் சரிவை கண்டு வந்த ஹுண்டாய், பிப்ரவரி மாதத்தில் 66 ஆயிரத்து 134 யூனிட்களின் விற்பனையை எட்டியுள்ளது. உள்ளூரில் அறிமுகமானதிலிருந்து பிப்ரவரி மாதத்தில் ப்ராண்ட் சார்பில் பதிவான அதிகபட்ச விற்பனை இதுவாகும். உள்ளூரில் 52 ஆயிரத்து 407 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு 13 ஆயிரத்து 727 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவானதை காட்டிலும் 12.6 சதவிகிதம் அதிகமாகும். க்ரேட்டா கார் மாடல் ப்ராண்டின் சிறந்த விற்பனையை பிப்ரவரியில் பதிவு செய்துள்ளது. ஹுண்டாய் 14 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 


Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

1. மாருதி சுசூகி ஆதிக்கம்

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதம் உள்ளூரில் மட்டும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 740 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியுடன் சேர்த்து ஒட்டுமொத்த விற்பனையானது 2 லட்சத்து 13 ஆயிரத்து 995 யூனிட்களை எட்டியுள்ளது. ப்ராண்டின் விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 11.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. டிசையர் கார் மாடல் கடந்த மாதம் ப்ராண்ட் சார்பில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. உள்ளூர் சந்தையில் மாருதி சுசூகி சார்பில் 19 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Car Sale Feb 2026: திரும்ப வந்துட்டேன்..! டாடாவை தட்டி ஓரங்கட்டிய ஹுண்டாய் - குறுக்கே வந்த மாருதி - கியா குதூகலம்

விற்பனையில் அசத்திய டாப் 10 கார் ப்ராண்ட்கள்:

கார் மாடல் பிப்ரவரி மாத விற்பனை
டாடா நெக்ஸான் 19,430 யூனிட்கள்
மாருதி சுசூகி டிசையர் 19326 யூனிட்கள்
டாடா பஞ்ச் 18,748 யூனிட்கள்
ஹுண்டாய் க்ரேட்டா 17,938 யூனிட்கள்
மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா 17,863 யூனிட்கள்
மாருதி சுசூகி எர்டிகா 17,807 யூனிட்கள்
மாருதி சுசூகி வேகன்ஆர் 14,885 யூனிட்கள்
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 14,883 யூனிட்கள்
மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ (க்ளாசிக் + N) 14,665 யூனிட்கள்
மாருதி சுசூகி பலேனோ 14,632 யூனிட்கள்

Frequently Asked Questions

பிப்ரவரி 2026 இல் டாடா மோட்டார்ஸ் எத்தனை யூனிட்களை விற்பனை செய்தது?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிப்ரவரி 2026 இல் 63,331 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 35% அதிகமாகும்.

பிப்ரவரி 2026 இல் கார் விற்பனையில் எந்த நிறுவனம் முதலிடம் வகித்தது?

பிப்ரவரி 2026 இல் மாருதி சுசூகி யூனிட்கள் அடிப்படையில் முதலிடம் வகித்தது. ஹுண்டாய் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

டாடா நிறுவனத்தின் அதிக விற்பனையான கார்கள் யாவை?

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் 19,430 யூனிட்களும், பஞ்ச் 18,748 யூனிட்களும் பிப்ரவரி 2026 இல் அதிகம் விற்பனையாகியுள்ளன.

ஹுண்டாய் நிறுவனம் பிப்ரவரி 2026 இல் எத்தனை யூனிட்களை விற்பனை செய்தது?

ஹுண்டாய் நிறுவனம் பிப்ரவரி 2026 இல் 66,134 யூனிட்களை விற்பனை செய்தது. இது உள்ளூரில் அதன் அதிகபட்ச விற்பனையாகும்.

மஹிந்த்ரா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை பிப்ரவரி 2026 இல் எவ்வளவு?

மஹிந்த்ரா நிறுவனம் பிப்ரவரி 2026 இல் 60,018 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டை விட 19% அதிகமாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Embed widget