மேலும் அறிய
Crime: தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை; காதல் கணவன் தலைமறைவு - திருச்சியில் அதிர்ச்சி
திருச்சியில் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
![Crime: தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை; காதல் கணவன் தலைமறைவு - திருச்சியில் அதிர்ச்சி Trichy crime news Husband absconds after murdering wife Police investigation TNN Crime: தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை; காதல் கணவன் தலைமறைவு - திருச்சியில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/04/6188333f1cfda942b9a259aee7ee04211688447019614184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போலீஸ் விசாரணை
திருச்சி மாநகர், பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார். பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சபுரா பீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
![Crime: தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை; காதல் கணவன் தலைமறைவு - திருச்சியில் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/04/a1381beaf91d77a93d128bd4ad2664491688447103160184_original.jpg)
மேலும், இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion