மேலும் அறிய

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் வடுகபட்டி பிரேம்நகரை சேர்ந்தவர் செல்லதுரை. போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 47). இவர் சின்ன சூரியூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகன் ரோகித் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிந்தாமணி துறையூர் சென்றுவிட்டார். விடுமுறைக்கு திருச்சி வந்திருந்த ரோகித் கடந்த 17-ந்தேதி நள்ளிரவில் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிந்தாமணியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை அந்த பகுதியில் வசிக்கும் சிந்தாமணியின் உறவினர் ஒருவர் பார்த்து, அவருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடா்ந்து மாலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. உடனே இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். கே.கே.நகர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை  - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியது: திருச்சி மாவட்டத்தில்  குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து குண்டர் சட்டம், உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், அதேபோல் வெளியூர் செல்லும் நபர்கள் தங்களுடைய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்து செல்ல வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது என்றனர். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமார பொருத்தவும் அறிவுரை வழங்கபட்டுள்ளது. அதேசமயம் எந்த நேரத்த்திலும் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். ஆகையால் பொதுமக்கள் அச்சபடாமல் , காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget