மேலும் அறிய
Advertisement
Thiruvarur: சாராயம் விற்பனை: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேர் கைது; 2100 லிட்டர் சாராயம் பறிமுதல்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக கூறி 56 பேர் கைது. 2100 லிட்டர் சாராயம் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ள நிலையில் தமிழக டிஜிபி உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்களை தீவிரமாக கைது செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு பகுதிகளில் சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் 130 நபர்கள் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் நேற்று சாராய வழக்கில் கைதானவர்களிடமிருந்து 2100 லிட்டர் சாராயம் மற்றும் 130 வெளிமாநில மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 3000 லிட்டர் சாராயம் மற்றும் 260 வெளி மாநில மது பாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பவர்கள் கைது செய்யும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை மற்றும் வெளி மாநில மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion