பென்ஸ் கார் டவுரி... மறுத்த மனைவிக்கு கணவர் குடும்பத்தார் கூட்டு பாலியல் வன்கொடுமை!
கணவர் குடும்பத்தார், அந்த பெண்ணை தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அறைக்குள் அடைத்து வைத்ததாகவும், கணவரும் அவரது உறவினரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
வரதட்சணையாக பென்ஸ் கார் கேட்டு, பெண் ஒருவர் கணவர் வீட்டாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பெண் ஒருவர் வரதட்சணை கொடுக்காததால் அவரது கணவர் மற்றும் மாமியாரால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரதட்சணையாக எஸ்-கிளாஸ் மெர்சிடஸ் கார் கொடுக்க முடியாததால், அந்த பெண்ணை துன்புறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணையும் அவரது இரண்டு மகன்களையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். மேலும் படிக்க: POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?
மேலும், கணவர் குடும்பத்தார், அந்த பெண்ணை தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அறைக்குள் அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது கணவரும் அவரது உறவினரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த பெண் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான தகவல் கிடைத்தபிறகு, கணவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Vir Das controversy: வீர் தாஸின் “Two Indians" : பேச்சு சர்ச்சையாவது ஏன்?
அந்த பெண் கடந்த 2003ஆம் ஆண்டு மேட்ரிமனி மூலம் திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆன உடனேயே தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். பெண்ணின் பெற்றோர் கணவர் குடும்பத்தாருக்கு விலையுயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வழங்கியுள்ளனர். ஆனால், தொடர்ந்து அப்பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தார். மேலும் படிக்க: Watch Video | மின்சார ஒயரை கடித்து உயிரிழந்த யானைக் குட்டி.. எழுப்ப முயற்சிசெய்யும் தாய் யானை.. கலங்கவைக்கும் வீடியோ
இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி அம்ரித்பால் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தன்னிச்சையாக காயப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்