Tamilnadu Rounudup 19.08.2025: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடகாவின் இருந்து 1.16 லட்சம் கன அடி நீர் திறப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - விநாடிக்கு 78 ஆயிரம் கன அடிநீர் வருகை
மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - சேலம் பூலாம்பட்டியில் விசைப்படகு சேவை நிறுத்தம்
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - இன்று கரையை கடக்க வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி; நாகை, பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வர மீனவர்கள் - 9வது நாளாக வேலைநிறுத்தம்
பேச்சுவார்த்தை தோல்வி; ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ரயில் மறியல்
சென்னை விமான நிலையத்தில் 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது
சேலம் விமான நிலையத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் ரயிலில் சிக்கி 235 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் கடுமையாக வீழ்ந்த முள்ளங்கி விலை - அறுவடை செய்யாமலே உழுத விவசாயிகள்





















