Watch Video | மின்சார ஒயரை கடித்து உயிரிழந்த யானைக் குட்டி.. எழுப்ப முயற்சிசெய்யும் தாய் யானை.. கலங்கவைக்கும் வீடியோ
மலம்புழாவில் பெரிய வனப்பகுதிக்கு அருகே உள்ள சரிவில் காட்டு யானை ஒன்று ஒருவரின் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்தது.
தோட்டத்தில் நீர்ப்பாசன தேவைக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் அறையை திறக்க முற்பட்டபோது யானை மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளனர். பாலக்காடு மாவட்டம், மலம்புழா வனப் பகுதியில் உள்ள வலியக்காட்டில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் குட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்கம்பியில் அறுந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த விடியோவில் அதன் தாய் யானை எழுப்புவதற்காக தும்பிக்கையால் நகர்த்தும் பரிதாப காட்சிகள் பதிவாகி உள்ளன.
Kerala Malampuzha, baby elephant dies of electric shock, mother helplessly trying to wake it up.https://t.co/mzYCMnXdyk pic.twitter.com/V9YyJD6xY1
— Devarajan AMK (@devacmdjbe) November 16, 2021
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாளையார் வனப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் திங்கள்கிழமை இரவு யானைகள் கூட்டம் புகுந்தது. இந்த பண்ணை மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. விவசாய நிலத்தில் இருந்த பம்ப் ஹவுஸை இடித்த யானைக் குட்டி மின்சார வயரை மென்று தின்றதால் மின்சாரம் தாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை யானைகளின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விழித்துக்கொண்டனர். அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, யானைகள் குட்டியைத் தூக்கி எட்டி உதைப்பதைக் கண்டனர். மக்கள் அலறத் தொடங்கியதையடுத்து, கூட்டம் காட்டுக்குள் திரும்பியது. ஆனால், தாய் யானை சடலத்தை விட மறுத்தது. ஒரு மணி நேரம் கழித்து தாய் யானையும் அங்கிருந்து வெளியேறியது.
இதுகுறித்து வாளையார் ரேஞ்ச் அதிகாரி ஆஷிக் அலி கூறுகையில், "இது சுமார் இரண்டரை வயதுள்ள ஆண் யானை குட்டி. வன எல்லைக்கு அருகில் உள்ள பகுதி என்பதால், கால்நடைகள் உணவு தேடி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. யானைப் பிரியர் மன்ற மாவட்டத் தலைவர் ஹரிதாஸ் மச்சிங்கல் கூறியதாவது: யானைகள் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருந்த வன விளிம்புப் பகுதிகளில் வன நில ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. "இப்பகுதியில் ஏராளமான எஸ்டேட்கள் உள்ளன. யானைக்கூட்டங்கள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை அடிக்கடி சாப்பிடுகின்றன. காட்டு பன்றிகளை பிடிக்க அப்பகுதி விவசாயிகள் அமைத்துள்ள மின் வேலி யானைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது, வனத்துறை மற்றும் கே.எஸ்.இ.பி., இணைந்து, அப்பகுதியில், வழிகாட்டுதல்படி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்," என்றார்.