Car Price Reduce: தாறுமாறா குறையப்போகும் கார்கள் விலை.. இத்தனை ஆயிரமா? எந்தெந்த கார்கள்?
இந்தியாவில் விரைவில் ஜிஎஸ்டி வரி மாற்றப்பட உள்ளதால் சிறய கார்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைய உள்ளது.

இந்தியாவில் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் 79வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரியை இரண்டு வரிகளாக மட்டும் மாற்றி எளிமைப்படுத்த உள்ளதாக அறிவித்தார். இதனால், ஜிஎஸ்டி வரி 5 மற்றும் 18 சதவீதமாக மட்டுமே இனி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ஜிஎஸ்டி வரியால் அதிகளவு விற்கப்படும் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறையப்போகும் சிறிய ரக கார்கள்:
ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்த அறிவிப்பால் காரின் விலையும் மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஹேட்ச்பேக் எனப்படும் சிறிய கார்களின் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிறிய கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து 1 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.
ஹேட்ச்பேக் கார்கள்:
பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி வரி மாற்றப்பட்டு 5 மற்றும் 18 சதவீதமாக மட்டும் அறிவிக்கப்பட்டால் இந்த சிறிய ரக கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். அப்போது, விலை மிகப்பெரிய அளவில் குறையும். எக்ஸ் ஷோ ரூம் விலையில் 12 முதல் 13 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1200 சிசி எஞ்ஜின் கொண்ட 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவாக உள்ள கார்களுக்கு 18 சதவீதமாக வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வளவு குறையும்?
இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை சிறிய கார்களின் விலை குறையும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கார் சந்தையில் கடந்த பல ஆண்டுகளாகவே சிறிய ரக கார்கள் முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி மற்றும் அந்த கார்களின் விலை உயர்வால் அதன் விற்பனையில் சற்று பின்னடைவு இருந்து வருகிறது.
பிரதமர் அறிவிப்பின்படி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் கார்களின் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மின்சார கார்களுக்கு மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. பெரிய எஸ்யூவி கார்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
என்னென்ன கார்கள்?
சுசிகி, ஆல்ட்ரோஸ், பலுனோ, டொயோட்டோ கிளான்சா, டாடா டியோகோ, சிட்ரோன், மாருதி சுசுகி வேகனார், ஐ10 நியாஸ், ஐ20, ஆல்டோ கே 10, ரெனால்ட் கிவித், சுசுகி எஸ் ப்ரெஸ்ஸோ ஆகிய கார்கள் ஹேட்ச் பேக் கார்கள் ஆகும். இந்த கார்களே புதியதாக கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக இருக்கும். இதனால், ஜிஎஸ்டி வரி மாற்றப்பட்டால் இந்த கார்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















