Crime: செய்யாறு அருகே சிறுமி 3 மாதம் கர்ப்பம்; கைதுக்கு பயந்து பெரியப்பா தற்கொலை..?
செய்யாறு அருகே 15 வயது சிறுமி 3 மாதம் கர்ப்பம் இதற்கு காரணமான பெரியப்பா கைதுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் பெற்றோர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாகக் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயது சிறுமி தனது தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறார். சிறுமிக்கு பெரியப்பா உறவு கொண்ட கூலித் தொழிலாளி சிறுமியின் தாய் உள்ளபோது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் தாய் இவர் உண்ணுடைய பெரியப்பா என்று கூறி அறிமுகம் செய்துள்ளார். இதனால் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். சில நாட்கள் சிறுமியின் தாய் இல்லாத போது அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சிறுமியின் தாயார் அருகில் உள்ள வீரம்பாக்கம் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிறுமியைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளதை அறிந்தனர். உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு வந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். உடனடியாக சிறுமியின் தாயாரிடம் இதை பற்றி மருந்துவர்கள் கூறியுள்ளார். இதனைக் கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்படது. பின்னர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வரும் பெரியப்பா தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் எனத் அழுத்துக்கொண்டே தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாயார் உடனடியாக செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை பிடிக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறுமி கர்ப்பமாக உள்ளதை அறிந்த அவர் தலைமறைவாகியுள்ளார். செய்யார் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ள நிலையில் கைதுக்கு பயந்தும் அவமானத்தால் பெரியப்பா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. பெரியப்பா உறவுமுறை கொண்ட ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகி கைது பயந்து பெரியப்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

