USA: ஒரே நொடி.. சீரழிந்த குடும்பம்! கவனக்குறைவின் உச்சக்கட்டம்! தவித்து நிற்கும் 3 குழந்தைகள்!
துப்பாக்கியை எடுத்து 2 வயது சிறுவன் விளையாடியபோது ட்ரிக்கரை அழுத்தியதால் சிறுவனின் தந்தை குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
விபத்து..
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவின் அவசர எண் 911க்கு அழைப்பு விடுத்தார். தன் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும் உடனடி உதவி வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனடியாக அந்த கணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிக்குண்டு பாய்ந்து கணவர் இறந்த நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். விசாரணையில் திடுக் தகவலை இறந்தவரின் மனைவி குறிப்பிட்டார்.
2 வயது மகன்..
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார்,''இறந்த நபர் தன் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 5 மாத குழந்தை உட்பட மொத்தம் 5 பேர் அந்தக்குடும்பத்தில் ஒரே அறையில் இருந்துள்ளனர். அந்த அறையில் ஏற்கெனவே லோட் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. தந்தை டிவியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் போது துப்பாக்கி எடுத்து 2 வயது மகன் விளையாடியுள்ளான். அப்போது விளையாட்டாக தந்தையை நோக்கி துப்பாக்கி ட்ரிக்கரை அழுத்தியுள்ளான். துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தந்தையை நிலைதடுமாற வைத்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். இந்த சம்பவத்தில் மனைவியை கைது செய்துள்ளது காவல்துறை.
கவனம் தேவை..
மேலும் பேசிய காவல்துறை, வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.சிறு கவனக்குறைவுக்கும் பெரிய விலை கொடுக்க நேரிடும். இப்போது ஒரு குடும்பமே சீரழிந்துவிட்டது. கணவர் இறந்துவிட்டார். மனைவி சிறைக்கு சென்றுவிட்டார். 3 குழந்தைகள் நிர்கதியாய் நிற்கின்றனர். கவனக்குறைவு வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கின்றன. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 வயது சிறுமி துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது தன் அம்மாவையே சுட்டுக்கொலை செய்தார்.
துப்பாக்கி கலாசாரம்..
சமீபத்தில் பள்ளி ஒன்றினுள் துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் புகுந்த 18 வயது இளைஞர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கி வைத்திருக்கலாம் என்பதே இந்த சிக்கலுக்கு வழிவகுப்பதாகவும், துப்பாக்கி வாங்குவதிலும் பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Crime: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை: 57 வயது ஆசிரியர் கைது: கொடூர சம்பவம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்