Crime: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை: 57 வயது ஆசிரியர் கைது: கொடூர சம்பவம்
10 வகுப்பு மாணவியை 57 வயதான ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை: 57 வயது ஆசிரியர் கைது: கொடூர சம்பவம் Kerala: Malappuram private school teacher booked and arrested under POCSO Act after 10 student complained about abuse Crime: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை: 57 வயது ஆசிரியர் கைது: கொடூர சம்பவம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/07/6d3d6d38768ba4ed86efdd3710bd6c70_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
10-ஆம் வகுப்பு மாணவியை 57 வயதான ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவர் 10 வகுப்பு மாணவியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தின் மலப்புரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மம்பாட்டைச் சேர்ந்த அப்துல் சலாம்(57) என்ற நபர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஆசிரியர் அப்துல் சலாம் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
(கைது செய்யப்பட்ட ஆசிரியர் அப்துல் சலாம்)
அவருடைய புகாரை தொடர்ந்து குழந்தைகள் நல ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை முழுமையாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் ஆசிரியர் அப்துல் சலாமை கைது செய்தனர். அவரிடம் வேறு மாணவிகள் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 57 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ச்சியான பாலியல் சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க:வளர்ப்பு மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த போலீஸ் அதிகாரி.. புகார் கொடுத்து, கதறிய தாய்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)