மேலும் அறிய

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்குப் புகலிடம் தரும் இடமாக திமுக மாறிவிட்டது - அன்புமணி

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகே இரண்டரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வமாகக் கொண்டாடப்படவேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்படும் நிலைதான் நிலவுகிறது. திமுகவினர் குற்றம் செய்தால் சர்வாதிகரியாக மாறுவேன் என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினரின் அனைத்துக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல், கைக்கட்டி, வாய்ப்பொத்தி நிற்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 22 இலட்சம் கிலோ கஞ்சா புழக்கத்தில் விடப்படும் அளவுக்கு நிலைமையை சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையாகும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இந்த அவலங்கள் அனைத்திற்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடம் நரகத்திற்குச் சமமானது. திமுகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு நரகமாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
TTV vs Vijay : திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
திமுக ஆட்சியில் ரூ.758 கோடி... தவெக ஆட்சியில் ரூ.1038 கோடி ஆனது எப்படி? - விஜய்யிடம் கணக்கு கேட்கும் டிடிவி
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?
TVK VCK: திமுக-வுடன் உறவு கொண்டாடும் திருமா..! பாமக-வுடன் கூட்டு சேருகிறதா தவெக?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget