மேலும் அறிய

UPI Credit: இனி Google Pay, Phone Pe மூலம் கடன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

UPI Credit: யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே யுபிஐ மூலம் வாடிக்கையாளர்கள் டெபாசிட் மட்டும் செய்து வந்த நிலையில், தற்போது கிரெடிட் வசதியும் அறிமுகமாகி உள்ளது.

யுபிஐ பரிபவர்த்தனை:

பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய வசதிதான் UPI (Unified Payments Interface). கடந்த 2016-ஆம் ஆண்டு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையைத் தொடங்கியது.

தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீக்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.  

டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 

கடனும் வாங்கலாம்:

அந்த வரிசையில் தற்போது யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு  புதிய வசதி அறிமுகமாகி உள்ளது. அதாவது, யுபிஐ மூலம் வாடிக்கையாளர்கள் டெபாசிட் மட்டும் செய்து வந்த நிலையில், தற்போது கிரெடிட் வசதியும் அறிமுகமாகி உள்ளது. இதனால் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளில் வாடிக்கையாளர்கள் கடன்களை வாங்கலாம். இந்த வசதி கிரெடிட் கார்டு போன்று செயல்படும்.  அதாவது, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் யுபிஜ மூலம் கடன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. 

இதன்கீழ், வாடிக்கையாளர்கள் கடனை வட்டியுடன் பிற்காலத்தில் திருப்பிச் செலுத்தலாம். இந்த வசதியை பெற UPI வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது சேமிப்பு கணக்கு, ஓவர் டிராஃப்ட் கணக்கு, ப்ரீபெய்டு வாலட்கள் மற்றும் கிரெட்டி கார்டுகளை இணைக்கும் வசதி மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் 10 பில்லியனை தாண்டியுள்ளது.

ஜூலை மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.96 பில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வந்த வசதி: 

யுபிஐ லைட் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும்படி இருந்தது. இந்நிலையில், 200 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ளும் அளவீட்டை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த அளவீட்டை தற்போது ரூ.500-ஆக உயர்த்த இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

எனவே, யுபிஐ லைட் சேவை மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும்  500 ரூபாய்க்கு கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேபெண்ட் செய்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க 

Moon 3D Image: 'க்யூட்'...நிலவில் லேண்டர் இருக்கும் 3D போட்டோவை எடுத்த ரோவர்... மாஸ் கிளப்பும் இஸ்ரோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget