Post Office Savings: பெண்களுக்கு தபால்துறையின் எளிமையான சேமிப்பு திட்டம்... ஆண்டுக்கு 7.5 % வட்டி..கூடுதல் விவரம்
Post Office Savings Scheme: இந்திய தபால்துறை பெண்கள் பொருளாதார அளவில் மேம்படும் வகையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையானது பெண்களுக்கு என்று தனியாக சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
இந்திய அஞ்சல் துறையானது, பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்புத் திட்டத்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான முதலீடு கொண்ட இத்திட்டமானது, பெண்களை பண அளவில் மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
image credits: @pixabay
அரசாங்கம் நடத்தும் இத்திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதில்லை.
வட்டி விகிதம்:
இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு வருடங்களில் முதலீட்டிற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, பெண்கள் சேமிக்கவும், தன்னிறைவு பெறவும் உதவும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.
யார் தொடங்கலாம்?:
இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஆகையால், ஒருமுறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 வருமானம் கிடைக்கும். அதாவது இரண்டு வருடங்களில் ரூ.2 லட்சம் முதலீட்டில் திட்டத்தின் கீழ் ரூ.31,125 வட்டி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.