மேலும் அறிய

Apollo: இந்தியாவின் முதல் ரோபோட்டிக், டெலிசர்ஜரி சிகிச்சை! வெற்றிகரமாக செய்த அப்போலா!

இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி ( தொலைதூர அறுவை சிகிச்சை திட்டம்) அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், 'அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக்ஸ் & டெலிசர்ஜரி' (Apollo Institute of Robotics & Telesurgery (ART)) எனும் புதிய சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது.

அப்போலோ:

6-வது அப்போலோ சர்வதேச கொலோரெக்டல் சிம்போசியம் (6th Apollo International Colorectal Symposium (AICRS) 2026) நிகழ்வின் போது இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் உலகெங்கிலும் உள்ள முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகள் கலந்து கொண்டு, குடல்சார் புற்றுநோய் (Colorectal cancer) அறுவை சிகிச்சையின் எதிர்காலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவப் பராமரிப்பு குறித்து விவாதித்தனர்.

இந்தக் கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த குடல்சார் மருத்துவப் பராமரிப்பின் வேகமான வளர்ச்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை தளங்கள் மற்றும் வளர்ந்து வரும் டெலிசர்ஜரி கண்டுபிடிப்புகள் எவ்வாறு உலகளவில் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளையும் அதன் முடிவுகளையும் நேர்மறையாக மாற்றியமைக்கின்றன என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

பன்னோக்கு சிறப்புச் சிகிச்சைத் திட்டம்:

Programme) திட்டம் முன்வைக்கப்பட்டது. இது சிக்கலான மலக்குடல் புற்றுநோய்களைக் கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான பன்னோக்கு சிறப்புச் சிகிச்சை திட்டமாகும். இந்தத் திட்டம் குடல்சார் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோய் நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், நோயியல் நிபுணர்கள், சிறப்பு செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்களை ஒருங்கிணைத்து, நோயாளிகளை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்குகிறது.

மற்றொரு முக்கிய மைல்கல்லாக, அப்போலோ மருத்துவமனைகளில் ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைகள் [robotic colorectal surgery] அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் 1,000-க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். 

ரோபோட்டிக் மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை:

இதில் இப்பிராந்தியத்திலேயே அதிக எண்ணிக்கையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட தனிநபர் ரோபோட்டிக் மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளும் [robotic rectal cancer resections] அடங்கும். இந்த ஆழ்ந்த அனுபவம் சென்னை அப்போலோ மருத்துவமனையை மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு மையமாகவும், மேம்பட்ட ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைக்கான முக்கியமான பயிற்சி மையமாகவும் மாற்றியுள்ளது. இதனால் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அப்போலோ மருத்துவமனையினால் அதிகம் கவரப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் குறித்து பேசிய கொலோரெக்டல் அறுவை சிகிச்சை நிபுணரும், AICRS 2026-ன் தலைவருமான பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் 4 [Prof Dr Venkatesh Munikrishnan, Consultant Colorectal Surgeon & Clinical Lead Institute of Colorectal Surgery and Chairperson AICRS 2026], " ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்களின் கூட்டு நிபுணத்துவத்தால் நோயாளிகள் தங்களது பிரச்சினைகளுக்கு அவசியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்யவே 'அப்போலோ ரெக்டல் கேன்சர்' திட்டம் உருவாக்கப்பட்டது. 

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, குறிப்பாக சிக்கலான இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சைகளில் துல்லியத்தைஅதிகரிப்பதோடு, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்து சிறந்த பலன்களையும் அளிக்கிறது என்றார்.

டெலிசர்ஜரி:

எஸ்.எஸ். இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் சுதிர் ஸ்ரீவாஸ்தவா [Dr. Sudhir Srivastava, Founder Chairman and CEO, SS Innovations] கூறுகையில், "அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மேம்பட்ட துல்லியம், அறுவை சிகிச்சையின் மீதான கட்டுப்பாடு மற்றும் தெளிவான பார்வையை வழங்குவதன் மூலம் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஏற்கனவே சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி 'டெலிசர்ஜரி' (Telesurgery) ஆகும்.

இது புவியியல் எல்லைகளைக் கடந்து அறுவை சிகிச்சை நிபுணத்துவம் சென்றடைவதை மறுவரையறை செய்யும். 'மந்த்ராசனா' (Mantrasana) போன்ற டெலிசர்ஜரி தளங்கள், பெரிய மருத்துவ மையங்களுக்கும் சிறப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகள் எங்கு இருந்தாலும் உயர்ந்த தரத்திலான அறுவை சிகிச்சை பலன்களைப் பெற முடியும்," என்றார்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விதமாக, ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி முறைகளை மேம்படுத்த 'அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக்ஸ் அண்ட் டெலிசர்ஜரி' (Apollo Institute of Robotics and Telesurgery (ART)) மையத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கியது. இந்தத் தொடக்க விழாவில் அப்போலோ மருத்துவமனையின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer - Chennai Region, Apollo Hospitals] ប់ គ្រប់បែ அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகியவற்றின் தலைமைச் செயல் அதிகாரி திரு. கரண் பூரி [Mr. Karan Puri, Chief Executive Officer, Apollo Proton Cancer Centre, Chennai & Teynampet Apollo Speciality Hospital] ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் டிசி-யின் மெட்ஸ்டார் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையின் கொலோரெக்டல் சர்ஜரி சிஸ்டம் சீஃப் மற்றும் 4. [Prof Dr Steven D Wexner, System Chief, Colorectal Surgery, Medstar Georgetown University Hospital, Washington DC, USA] L பல்கலைக்கழகக் கல்லூரியின் கன்சல்டண்ட் கொலோரெக்டல் சர்ஜன் மற்றும் அசோசியேட் ப்ரொபஸருமான பேராசிரியர் மனிஷ் சந்த் [Prof. Manish Chand, ConsultantColorectal Surgeon & Associate Professor, University College London, UK] தலைமை தாங்கிய இந்த AICRS 2026 கருத்தரங்கு, சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல்சார் அறுவை சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்டது. 

கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு பொதுவான அறுவை சிகிச்சை துறையாக இருந்த குடல்சார் மருத்துவத்தை, தொழில்நுட்பம் மற்றும் பல்துறை புற்றுநோய் பராமரிப்பு சார்ந்த ஒரு சிறப்புத் துறையாக உருவெக்க செய்த முயற்சியை இது பிரதிபலிக்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983- ஆண்டு டாக்டர் பிரதாப் ரெட்டி சென்னையில் முதல் மருத்துவமனையைத் தொடங்கியபோது, அது மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, அப்போலோ 76 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக விளங்குகிறது.

3,00,000-க்கும் அதிகமான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ள அப்போலோ மருத்துவமனை இன்று உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 

அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கான சிகிச்சையை வழங்கவும், உலகை இன்னும் ஆரோக்கியமான இடமாக மாற்றவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget