Petrol-Diesel Price, 25 May: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன்காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த புதிய விலையின் அடிப்படையிலே மூன்றாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் சென்னையில் விற்பனை செய்யப்பட்டது அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கலால் வரி குறைப்பு
முன்னதாக இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது.
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பெட்ரோல் விலை ஏற்றத்தால் பால், டீ உள்ளிட்ட சில பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

