Paytm Share Fall Analysis: பேடிஎம் பங்குகள் 26% சரிவு...காரணம் இது தான்!
பேடிஎம் நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அப்போதே தள்ளுபடியில்தான் இந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கும் என வல்லுநர்களும் தெரிவித்தனர். ஆனால் 26% சரிவு என்பது கொஞ்சம் அதிகமே.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்னும் டாக் லைனுடன் வெளியான பேடிஎம் பங்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நவம்பர் 18-ம் தேதி காலை 10 மணிக்கு இந்த பங்கின் முதல் வர்த்தகம் தொடங்கியது. 10 சதவீதம் அளவுக்கு சரிவுடன் தொடங்கிய இந்த பங்கு அதிகம் 26 சதவீதம் வரை சரிந்தது. இதுவரை ஐபிஓகளில் பெரும் லாபம் அடைந்துவந்த முதலீட்டாளர்கள் பெரும் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.
- 2,150 ரூபாய்க்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் அதிகபட்சமாக 26 சதவீதம் சரிந்து 1586 ரூபாய் வரை சரிந்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என இதுவாகும். சுமார் 18,000 கோடி அளவுக்கு சந்தையில் நிதி திரட்டியது.
- தொடங்க நிகழ்ச்சியில் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பேசினார். அப்போது எமேஷனலாக இருந்த அவர் கண்ணை துடைக்கும் போட்டோ பொருளாதார தளங்களில் முக்கிய இடத்தை பிடித்தி வருகிறது.
- 2021-ம் ஆண்டில் மோசமான பட்டியான பங்குகளில் பேடிஎம் முதல் இடத்தில் இருக்கிறது.
ரூ.39000 கோடி இழப்பு
இந்த சரிவின் காரணமாக ஒரே நாளில் 38000 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படிருக்கிறது. வர்த்தகத்தை தொடங்கும் முன்பு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் முதல் நாள் வர்த்தகத்தில் 1.01 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கிறது.
சரிவுக்கு என்ன காரணம்?
கடந்த சில மாதங்களாக வெளியாக ஐபிஓகள் அனைத்தும் லாபத்தை கொடுத்ததால், ஐபிஓ குறித்து முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் பேடிஎம் நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அப்போதே தள்ளுபடியில்தான் இந்த பங்கு வர்த்தகத்தை தொடங்கும் என பல பங்குச்சந்தை வல்லுநர்களும் தெரிவித்தனர். ஆனால் 26 சதவீத சரிவு என்பது கொஞ்சம் அதிகமே.
டிஜிட்டலுக்கு வந்த முதல் நிறுவனமாக இருக்கலாம், பெரிய வாடிக்கையாளர்களை வைத்திருக்கலாம். ஆனால் இந்த நிறுவனம் இன்னுமும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருவதால் சரிந்திருப்பதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் ஒரு மனதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த் நிலையில் வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனமான Macquarie, பேடிஎம் பங்கு மேலும் சரியும் கணித்திருக்கிறது. தற்போது 1586 ரூபாயில் வர்த்தகமாகிறது. ஆனால் ரூ.1200 வரைக்கும் கூட சரியும் என இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் கவனம் இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாக புரோக்கிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் பேடிஎம் செய்யும் அனைத்து தொழில்களையும், போட்டி நிறுவனக்கள் செய்துவருகின்றன. அதனால் வரும் காலத்திலும் பெரிய போட்டி இருக்கும் என்றே தெரிவித்திருக்கிறது. போட்டி காரணமாக லாபம் சம்பாதிப்பதற்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது.
வெளியேறுங்கள்
பட்டியலான விலையில் இருந்து 28 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது என்பதால் இதனை முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டாம் என ஐஐஎப்எல் நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மாறும் வரை இந்த பங்கில் இருந்து விலகி இருப்பது நல்லது. பேடிஎம் ஈடுபட்டுவரும் எந்த தொழிலிலும் அந்த நிறுவனம் முதல் இடத்தில் இல்லை என வேறு சில ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உங்களுக்கு அலாட்மெண்ட் கிடைக்கவில்லை. ஆனால் சரிவை பயன்படுத்தி வாங்க நினைத்தால் வேண்டாம் என்பதே ஆலோசனை.
உங்களுக்கு அலாட்மெண்ட் கிடைத்திருக்கிறது. முதல் நாள் கிடைக்கும் லாபத்துகாக வாங்கினால் , காத்திருந்து உயரும்போது விற்று வெளியேறலாம்.
உங்களுக்கு அலாட்மெண்ட் கிடைத்திருக்கிறது. நீங்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் என்றால் மிக நீண்ட காலத்துக்கு வைத்திருக்கலாம் என ஆலோசகர்கள் பிரித்து ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
பேடிஎம்-யை தவிர்த்து வேறு பங்குகளில் கவனம் செலுத்தவும் என்பது சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி.