Gold Rate Reduced: இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா.?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 205 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஏறுமுகத்திலிருந்து இறங்குமுகத்திற்கு மாறிய தங்கம் விலை
கடந்த மாதம் 22-ம் தேதி, ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்தை கடந்து, 74,320 ரூபாய்க்கும், கிராம் விலை 9 ஆயிரத்தை கடந்து 9,290 ரூபாய்க்கும் விற்பனையாகி அதிர்ச்சி அளித்தது. அதற்கு அடுத்த நாளே அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை, சவரன் 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 24-ம் தேதி சற்று குறைந்து சவரன் 72,040 ரூபாய் என்ற விலையை எட்டிய தங்கம், 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.
28-ம் தேதி சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, 71,520 ரூபாய்க்கு விற்பனையாது. தொடர்ந்து, 29-ம் தேதி 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 71,840 ரூபாக்கு விற்பனையாது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,980 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, அட்சய திருதியையான நேற்று அதே விலையில் நீடித்த தங்கம், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
மே 1-ம் தேதியான இன்று தங்கத்தின் விலை, சவரனுக்கு அதிரடியாக 1,640 ரூபாய் குறைந்து, சவரன் 70,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் விலை 205 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,775 ரூபாயாக உள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்ததால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
வெள்ளியின் விலையும் இன்று குறைந்தது
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 26, 27 தேதிகளில் கிராம் 112 ரூபாயாக இந்த வெள்ளியின் விலை, 28-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, 111 ரூபாயாக விற்பனையானது. தொடர்ந்து 30-ம் தேதி வரை அதே விலையில் நீடித்த வெள்ளி, இன்று கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 109 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இதேபோல் தொடர்ந்து குறைந்தால், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.





















