Stock Market Today:ஏற்றத்தில் பங்குச்சந்தை; 80 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்!
Stock Market Today: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
வர்த்த நேர தொடக்கத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.30% புள்ளிகள் உயர்ந்து 80,224 ஆகவும் நிஃப்டி 0.28% புள்ளிகள் உயர்ந்து 24,353 ஆகவும் வர்த்தக்கதை தொடங்கியது.
வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காலை 11.00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 171.99 அல்லது 0.02% உயர்ந்து 80,155.03 புள்ளி ஆகவும் நிஃப்டி 35.90 அல்லது 31.90% உயர்ந்து 24,324.70 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் நேரமறையான சூழல், அமெரிக்க தேர்தலுக்கு முன்பு வட்டி விகிதம் குறைக்கபடும் என்று எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாகவே ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஐ.டி. ஆட்டோமொபைல், மெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டியை பொறுத்தவரையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிண்டால்கோ, ஹெச்,சி,எல். டெக்., டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
ஹெ.சி.எல். டெக், டி.சி.எஸ். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ந்போசிஸ், எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ்சன் பார்மா, டாடா மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், பவர்கிரிட் காப், ஈச்சர்ஸ் மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு, ஸ்டீல், நெஸ்லே, மாருதி சுசூகி, விப்ரோ, எல்.டி.ஐ. மைண்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
iஇந்தஸ்லேண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், சிப்ளா, டெக் மஹிந்திரா, சிப்ளா, ஹீரோ மோட்டர்கார்ப், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ.ஸ்ரீராம் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், க்ரேசியம், ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம் ஆகி வருவது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில்,”நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவைகளுக்கு புதிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்க்கு 80 டாலர் விற்பனையாகி வருகிறது.” என்றார்
இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான சூழல் தொடர்ந்தால் நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளை எட்டிவிடும் என்று நிபுணர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.