TN Budget 2022: சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் - நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் தகவல்
சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள்ளை தவிர்க்க சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
![TN Budget 2022: சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் - நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் தகவல் TN Budget 2022: Special Social media center will be created in Tamilnadu says Finance Minister Palanivel Thiagrajan TN Budget 2022: சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் - நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/c8822a4567aadb9eca3dd0365fc957a1_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பட்ஜெட் 2022-ஐ நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய உடன் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சில நேரம் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் நிதியமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்க தொடங்கினார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தவிர்க்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)