TN Budget 2022 LIVE: கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கியுள்ளனர்.. பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்
Tamil Nadu Budget 2022 LIVE Updates: 2022- 2023ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த தகவல்களை உடனுக்குடன் abp நாடு பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
Tamil Nadu Budget 2022 LIVE Updates | தமிழ்நாடு பட்ஜெட் 2022-23
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கலுக்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பட்ஜெட் தாக்கலை ஊடகம் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நேரலை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் காகிதமில்லா பட்ஜெட் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பட்ஜெட் நகலானது அரசியல் தலைவர்கள் முன் இருக்கும் கணினியில் இடம்பெற்றிருக்கும். அதை தொடுதிரை வசதியோடு தலைவர்கள் படிக்க முடியும்.
வேளாண்பட்ஜெட் தாக்கல்
கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்(Palanivel Thiagarajan) தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மாலை அலுவல் ஆய்வு குழு கூட்டமானது நடைபெறும். இந்தக் கூட்டத்தில்தான் பட்ஜெட் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் நாளை மறுதினம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 21 முதல் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று நடக்கும் என்று சொல்லப்படுகிறது. 24 ஆம் தேதி முதல்வரின் பதிலுரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கியுள்ளனர்.. பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்
கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கியுள்ளனர்.. பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்
புதிய மாநகராட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி நிதி
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு
அதிமுக வெளிநடப்பை கிண்டல் செய்த பிடிஆர்
எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் இங்கு அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்பு துறை வலுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டப்பிறகு நிச்சயம் வெளிநடப்பு செய்திருப்பார்கள்
- பேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வலுப்படுத்தப்படும்
இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வலுப்படுத்தப்படும்
நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது
ஆங்கிலத்திலும் பட்ஜெட் உரையாற்றிய நிதி அமைச்சர்
ஆங்கில புரிதலுக்காக ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்