Share Market: கிடுகிடு சரிவு.. 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்ற மும்பை பங்கு சந்தை..! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்
Share Market: இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை பெரும் சரிவில் முடிவடைந்தது.
Share Market : இன்று காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது மாலை முடியும்போது பெரும் சரிவில் முடிவடைந்தது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 927.74 புள்ளிகள் குறைந்து 59, 744 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 272.40 புள்ளிகள் குறைந்து 17,554.30 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இன்று தொடக்க வர்த்தகத்திலேயே இந்திய பங்குச் சந்தை பலத்த அடிவாங்கியது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது முதலீட்டளார்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Sensex tanks 927.74 points to settle at 59,744.98; Nifty falls 272.40 points to 17,554.30
— Press Trust of India (@PTI_News) February 22, 2023
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 303.68 அல்லது 0.50% புள்ளிகள் குறைந்து 60,369.04 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 78.15 அல்லது 0.44% புள்ளிகள் குறைந்து 17,748.55 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
லாபம் - நஷ்டம்:
இன்றைய நாள் முடிவில் நிஃப்டி 50ல் உள்ள 50 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்துடனும், 47 நிறுவனங்கள் சரிவிலும் வர்த்தக நிறைவில் காணப்பட்டன.
அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல், பிரிட்டாணியா, சிப்லா, கோல் இந்தியா, நெஸ்ட்லே, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ, டிசிஎஸ்,விப்ரோ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
பஜாஜ் ஆட்டோ, ஐ.டி.சி, டிவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
Rupee falls 6 paise to close at 82.85 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) February 22, 2023
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பானது, 6 காசுகள் சரிந்து, 82.85 ரூபாயாக உள்ளது என பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read: Gold, Silver Price: ஹேப்பி நியூஸ் மக்களே...தங்கம் விலையில் மாற்றமில்லை...இன்றைய நிலவரம் இதுதான்..