Maruti SUV: சும்மாவே பேயாட்டம் ஆடும், இப்ப புத்தம் புதுசா 3 எஸ்யுவியுமா..! மாருதியின் 35 கி.மீ., மைலேஜ் கார்
Upcoming Maruti SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள, 3 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Upcoming Maruti SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதியின் அடுத்த 3 கார் மாடல்கள், எப்போதும் அறிமுகமாகும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மாருதியின் புதிய கார்கள்:
இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுசூகி தொடர்கிறது. மலிவு விலை மற்றும் எரிபொருள் செயல்திறன் காரணமாக, இந்நிறுவன கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தான், இந்திய சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எஸ்யுவி, ஹைப்ரிட், மின்சார எடிஷன், சிஎன்ஜி மற்றும் இரட்டை எரிபொருட்களில் செயல்படும் கார் ஆகியவற்றை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல வாகனங்களை திட்டமிட்டு இருந்தாலும், அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள முதல் 3 கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
3 புதிய கார்கள்
மாருதியின் அடுத்த மூன்று கார் மாடல்களுக்கான பட்டியலில் எஸ்குடோ, இ - விட்டாரா மற்றும் ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் ஆகியவை அடங்கும். கிராண்ட் விட்டாரா அடிப்படையில் உருவாக்கப்படும் எஸ்குடோ, எக்ஸ்க்ளூசிவ் ஆக அரேனா ஷோரூமில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஃப்ரான்க்ஸ் புதிய மாடலாக இல்லாவிட்டாலும், ஹைப்ரிட் அம்சத்தை பெறுவது அதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. அவற்றின் விவரங்கள், வெளியீட்டு தேதி மற்றும் விலை தொடர்பாக தகவல்களை இங்கே அறியலாம்.
1. மாருதி எஸ்குடோ
மாருதியின் கிராண்ட் விட்டாராவிற்கு மாற்றாக சற்றே மலிவு விலையில் புதிய எஸ்குடோ கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு எஸ்யுவிக்களுமே பிளாட்ஃபார்ம், பவர்ட்ரெயின், அம்சங்கள் மற்றும் வடிவமைபை ஒரே மாதிரியாக பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், விட்டாராவை காட்டிலும் எஸ்குடோ நீளமான வீல்பேஸ் மற்றும் பெரிய பூட் ஸ்பேஸை பெறுகிறது. அதேநேரம், இதில் மாடன் தொழில்நுட்பமான ADAS இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அரேனா நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்பதால், இதன் விலை போட்டித்தன்மையுடன் தீவிரமானதாக இருக்கலாம். அதற்காக எஸ்குடோவில் வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயினை மாருதி தவிர்க்கலாம். இந்த காரானது 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் மைல்ட் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷனை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரானது கிரேட்டா, செல்டோச், குஷக், டைகுன், எலிவேட் மற்றும் ஆஸ்டர் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.
2. மாருதி இ-விட்டாரா:
e-ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் மாருதி இ-விட்டாரா கார் மாடலானது இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இதில் இடம்பெறும் 49KWh மற்றும் 61 KWh பேட்டரி பேக்குகளானது, ஃப்ரண்ட் ஆக்சில் மவுண்டட் மோட்டார்களை கொண்டிருக்கலாம். அவை முறையே 143bhp மற்றும் 173bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக் வேரியண்ட்களை கொண்ட காருமே, 192.5Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடியதாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டா, கர்வ், BE.6, ZS EV ஆகிய மின்சார கார் மாடல்கள், இ விட்டாராவிற்கு போட்டியாக இருக்கும்.
3. மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட்
மாருதியின் ஃப்ராங்ஸ் ஹைப்ரிட் கார் மாடலானது, பிராண்டின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வலுவான ஹைப்ரிட் மாடலின் அறிமுகத்தை குறிக்கிறது. இது ஸ்விஃப்ட் கார் மாடலில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z12E பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இயந்திரமானது எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் வலுவான ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின் படி, புதிய ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் எடிஷன் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ADAS தொழில்நுட்பத்தையும் பெற்று, எந்தவித வெளிப்புற அப்டேட்டுகளையும் கொண்டு வராது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ்டெர், நெக்சான், சோனெட், XUV 3XO, பிரேஸ்ஸா ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.
மாருதியின் புதிய கார்கள்: விலை, வெளியீடு
| கார் மாடல் | எதிர்பார்க்கப்படும் வெளியீடு | எதிர்பார்க்கப்படும் விலை |
| மாருதி எஸ்குடோ | செப்-அக்டோபர், 2025 | ரூ.9.70 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை |
| மாருதி இ-விட்டாரா | செப்டம்பர், 2025 | ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை |
| மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் | 2026ன் முதல் காலாண்டு | ரூ.9.50 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரை |





















