Upcoming MPVs: குடும்பங்கள் கொண்டாடும் கார், ஹைகிளாஸ் அம்சங்களை கொண்ட 7 சீட்டர் - சண்டைக்கு தயாராகும் நிஸான்
Upcoming MPV Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 3 மல்டி பர்பஸ் வெஹைகிள் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming MPV Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 3 எம்பிவி கார் மாடல் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய MPV கார் மாடல்கள்:
கனவு காரை வாங்கும்போது அனைவரும் கவனிக்கும் முக்கியமான அம்சங்களில் இன்று இடவசதி. குறிப்பாக பெரிய குடும்பங்களை கொண்டவர்களும், அவ்வப்போது மொத்தமாக வெளியூர் செல்பவர்களுக்கும் இடவசதி நிறைந்த எம்பிவி கார் சிறந்த தேர்வாக இருக்கும். இந்நிலையில் தான், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்பிவி செக்மெண்டில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் அறிமுகமாக உள்ளன. அதில் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள், கியா, எம்ஜி மற்றும் நிஸான் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளன. உள்நாட்டில் அதிக பன்முகத்தன்மை கொண்ட செக்மெண்டில் அறிமுகமாக உள்ள புதிய கார்களில், என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
1. கியா காரென்ஸ் கிளாவிஸ் EV:
இன்ஜின் அடிப்படையிலான கிளாவிஸ் கார் மாடல் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் மின்சார எடிஷன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என கியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. வெளிப்புறத்தில் இது லேசான திருத்தங்களை பெறும் என்றும், கேபினில் சில மேம்படுத்தல்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டா மின்சார எடிஷனில் இருக்கும் பல அம்சங்களை, கிளாவிஸ் பகிரக்கூடும் என கூறப்படுகிறது. இந்த மிட்சைஸ் எலெக்ட்ரிக் எம்பிவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 450 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
7 இருக்கை வசதிகளை கொண்ட இந்த காரானது பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும். அதில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டல் கன்சோல், மல்டிபிள் ஏர்பேக்ஸ், வெண்டிலேடட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். இந்த காரின் விலை ரூ.22 முதல் 26 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
2. MG M9
MG நிறுவனத்தின் முற்றிலும் புதிய மின்சார காரான M9, நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 7 சீட்டர் வசதி கொண்ட இந்த கார், 3 வண்ண விருப்பங்களில் ரூ.70 லடசம் வரையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை தளங்களான MG அவுட்லெட்டில் மட்டுமே இந்த கார் விநியோகம் செய்யப்படலாம். தோற்றம் கியா கார்னிவலுடன் ஒப்பிடும்போது தளர்வாக இருந்தாலும், M9 இன் பேட்டரி-எலெக்ட்ரிக் பவர் ட்ரெய்ன் அதை உடனடியாக போட்டியாளர் இல்லாத மாடலாக மாற்றுகிறது.
M9 கார் மாடலில் இடம்பெற்றுள்ள 90 KWh பேட்டரி பேக்கானது, 245bhp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 430 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. உட்புறத்தில் அதிகபட்சமான சொகுசு அம்சங்களை கொண்டிருக்கும். உதாரணமாக ஸ்லைடிங் ரியர் டோர்ஸ், டூயல் பேன் சன்ரூஃப்ஸ், வெண்டிலேடட் சீட்ஸ், ரிக்ளைனிங் ஒட்டொமேன் ஸ்டைல் இருக்கைகள் உள்ளிட்டவையும் அடங்கும்.
3. நிசான் காம்பேக்ட் எம்பிவி:
ரெனால்ட் கைகரின் CMF-A+ கட்டமைப்பு அடிப்படையில், நிசானின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி தயாராகி வருகிறது. அதிக அளவில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படுவதால், இதன் விலை போட்டித்தன்மை மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உருவாகும் இந்த கார், 1.0 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும். நிஸானின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ஆனது, ஹூண்டாய் க்ரேட்டா மற்றும் பிறவற்றுடன் போட்டியிடும் நிசானின் ஐந்து இருக்கைகள் கொண்ட C-SUVயின் வெளியீட்டிற்கு முன்னதாக சந்தைப்படுத்தப்படும். 7 இருக்கைகளை கொண்ட இந்த காரின் விலை ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை விலையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





















