Suzuki Invest in Ev: முடிந்தது புரிந்துணர்வு ஒப்பந்தம்.. குஜராத்தில் 10,440 கோடியில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு.. முழு விவரம் இதோ..!
குஜராத் மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
குஜராத் மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி ஜப்பான் பிரதமர் ஃப்யூயோ கிசிடா மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி முன்னிலையில்
டெல்லியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 2025க்குள் சுசூகி மின்சார வாகனங்களுக்கான உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.3,100 கோடியும், 2026க்குள் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.7,300 கோடியும் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 2025க்குள் மாருதி சுசூகி டொயாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் வாகன மறுசுழற்சி ஆலை அமைக்க ரூ.45 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய ஆலை
இந்த ஒப்பந்தத்தின் படி, உள்ளூர் வாகன தயாரிப்பு முறையை பயன்படுத்தி மிட் சைஸ் EV SUV கார்களை தயாரித்து வெளியிட, டொயாட்டா மற்றும் சுசூகி நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. இந்த வாகனமானது ஹூண்டாய் கிரெட்டாக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வகை கார்களை டொயாட்டாவும் மாருதியும் இந்தியாவில் தயாரிக்க இருக்கின்றன. இந்த கார்கள் ஏற்றுமதியும் செய்யப்படும் என்பதால் இந்தத் திட்டம் பெரிய உற்பத்தி திறனை கொண்டதாக இருக்குமாம்.
எப்போது அறிமுகம்
முதற்கட்டமாக இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த ஆலையில் உற்பத்தி செய்யபடும் முதல் மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதன் விலை நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் பெரிய ஆலையாக இந்த ஆலை அமையும் இந்த கார்கள் தயாரிப்பை தொடர்ந்து, வரும் வருடங்களில் இன்னும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க சுசூகி டொயாட்டா நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.