மேலும் அறிய

Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

Tata Nexon Rival SUV: ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் அசத்தி வரும் டாடா நெக்ஸான் மாடலுக்கு போடிட்யாக, உள்ளூரில் கிடைக்கும் சப்-காம்பேக்ட் கார் மாடல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Nexon Rival SUV: நாட்டிலேயே அதிக வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கார் மாடலாக டாடா சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன நெக்ஸான் விளங்குகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடுமையான போட்டி நிலவும் பிரிவுகளில் சப்-காம்பேக்ட் எஸ்யுவி-யும் ஒன்றாகும். அவற்றை எல்லாம் தாண்டி ஆதிக்கம் செலுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், டாடாவின் நெக்ஸான் கார் மாடல் தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. காரணம் பல்வேறு விதமான எரிபொருள், ட்ரான்ஸ்மிஷன் என நாட்டிலேயே அதிகபட்சமாக 60-க்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் இந்த எஸ்யுவி விற்பனை செய்யப்படுகிறது. தங்களது பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவதால், புதியதாக கார் வாங்குபவர்களும், எண்ட்ரி லெவல் எஸ்யுவியை தாண்டி திட்டமிடுபவர்கள் மற்றும் பட்ஜெட்டில் ஒரு நல்ல எஸ்யுவியை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நெக்ஸான் முதன்மையான தேர்வாக உள்ளது. அந்த வகையில் தான், கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டிலேயே அதிகம் விற்பனையான கார் பட்டியலில் கூட, நெக்ஸான் (23,365 யூனிட்கள்) முதலிடம் பிடித்துள்ளது.

பட்ஜெட்டில் தரமான எஸ்யுவி

டாடா நெக்ஸானின் விலையானது ரூ.7.32 லட்சத்தில் தொடங்கி ரூ.17.49 லட்சம் வரை நீள்கிறது. பெட்ரோல், டீசல் சி.என்.ஜி., மற்றும் மின்சார எடிஷன் என 4 வகையான எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப வசதிகள் வித்தியாசப்படுகின்றன. 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின், 1.2 லிட்டர் சிஎன்ஜி டர்போ சார்ஜ்ட் (நாட்டின் முதல் டர்போசார்ஜ்ட் சிஎன்ஜி இன்ஜின்) மற்றும் மின்சார எடிஷனில் மீடியம் & லாங்க் ரேஞ்ச் வேரியண்ட் ஆகிய பவர்ட்ரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது. மேனுவல், ஆட்டோமோடிக் மற்றும் DCT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். வேரியண்ட்கள் அடிப்படையில் 17 முதல் 24 கிலோ மீட்டர் வரை மைலேஜ் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார எடிஷன் நெக்ஸான் அதிகபட்சமாக 370 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.



Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

நெக்ஸானை சுத்து போடும் 5 சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்கள்

நெக்ஸான் கார் மாடலுக்கு கடும் போட்டியாக மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா, ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், மஹிந்த்ரா XUV 3XO மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகிய மாடல்கள் திகழ்கின்றன. ஒரே மாதிரியான அளவீடுகள், விலை மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இந்த போட்டியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். 

1. மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா

டாடா நெக்ஸானின் நெருக்கமான போட்டியாளராக மாருதி சுசூகியின் ப்ரேஸ்ஸா கார் மாடல் விளங்குகிறது. 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் வலுவான செயல்திறனுக்கு வழிவகை செய்கிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள மாருதியின் சர்வீஸ் செண்டர்கள் ப்ரேஸ்ஸா மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. அதேநேரம், இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாதது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் மொத்தம் 15 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது, ரூ.8.26 லட்சத்தில் தொடங்கி ரூ.13.01 லட்சம் வரை நீள்கிறது. லிட்டருக்கு சுமார் 19 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.


Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

2. ஹுண்டாய் வென்யு

தொழில்நுட்ப ரீதியாக அதிகப்படியான அம்சங்களை கொண்டு நெக்சானுக்கான கடும் போட்டியாளராக ஹுண்டாயின் வென்யு மாடல் திகழ்கிறது. இதில் 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.  5 & 6 ஸ்பீட் மேனுவல், 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் மற்றும் IVT/CVT ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.


Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

ஒட்டுமொத்தமாக 27 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலை ரூ.7.90 லட்சத்தில் தொடங்கி ரூ.15.69 லட்சமாக நீள்கிறது. வேரியண்ட்கள் அடிப்படையில் 17 முதல் 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. கியா சோனெட்

வென்யு கார் மாடல் உருவாக்கப்பட்ட அதே ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டாலும், கூடுதலான ப்ரீமியம் இண்டீரியர் வசதிகளை கியா சோனெட் பெற்றுள்ளது. போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பலதரப்பட்ட ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள், இதனை நெக்ஸானுக்கான வலுவான போட்டியாளராக மாற்றுகிறது. 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் GDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 5 ஸ்பீட் மேனுவல் தொடங்கி 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் வரை பயனர்கள் தேர்வு செய்யலாம். 21 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலை, ரூ.7.30 லட்சத்தில் தொடங்கி ரூ.14.09 லட்சம் வரை நீள்கிறது. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. வேரியண்ட்கள் அடிப்படையில் 18 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

4. மஹிந்த்ரா XUV 3XO

மஹிந்த்ராவின் முந்தைய XUV 3OO மாடலின் மாற்றாக 3XO சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. செயல்திறன் அடிப்படையில் இந்த பிரிவின் சிறந்த மாடலாக திகழ்கிறது. அதிகப்படியான இழுவைத்திறன், டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை 3XO மீதான கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல்  மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வகைகலை, மேனுவல், டார்க் கன்வெர்டர், ஆட்டோமேடிக் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் தேர்வு செய்யலாம். வேரியண்ட்கள் அடிப்படையில் 18 முதல் 21 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குகிறது. 29 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலையானது ரூ.7.28 லட்சத்தில் தொடங்கி ரூ.15.79 லட்சம் வரை நீள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.


Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்?

5. ஸ்கோடா கைலாக்

ஓட்டுனருக்கான சிறந்த அனுபவங்களை வழங்குவது மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நெக்ஸானுக்கு கைலாக் கார் போட்டியாகிறது. இந்திய சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 6 பிரதான வேரியண்ட்களில் ரூ.7.59 லட்சத்தில் தொடங்கி ரூ.12.99 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது.


Nexon Rival: நாட்டின் பெஸ்ட் கார்..! 60 வேரியண்ட்கள், சுத்து போடும் 5 SUV-க்கள் - விலை, மைலேஜில் எது பெஸ்ட்? 

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget