Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate Car: ஹோண்டா நிறுவனத்தின் Honda Elevate காரின் விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம ஹோண்டா. ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Honda Elevate ஆகும். இந்த காரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
Honda Elevate:
ஹோண்டா எலிவேட் கார் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். வசீகரமும், கம்பீரமும் கலந்த தோற்றம் கொண்ட இந்த Honda Elevate காரில் மொத்தம் 22 வேரியண்ட்கள் உள்ளது.இந்த கார் இந்தியாவில் மிகவு்ம பிரபலமான கார் ஆகும்.
விலை என்ன?
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.64 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 20.73 லட்சம் ஆகும். 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் திறன் கொண்டது.
மேனுவலில் இந்த கார் 15.31 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. ஆட்டோமெட்டிக்கில் 16.92 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 119 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது ஆகும்.
வேரியண்ட்களும், விலைகளும்:
Elevate SV MT - ரூ.13.64 லட்சம்
Elevate V MT - ரூ.14.81 லட்சம்
Elevate V CVT - ரூ.16.22 லட்சம்
Elevate VX MT - ரூ.16.81 லட்சம்
Elevate Elite Pack VX MT - ரூ.16.94 லட்சம்
Elevate Apex Edition VX MT - ரூ.17.12 லட்சம்
Elevate VX CVT - ரூ.18.22 லட்சம்
Elevate Apex Edition VX CVT - ரூ.18.30 லட்சம்
Elevate ZX MT - ரூ.18.35 லட்சம்
Elevate Elite Pack VX CVT - ரூ.18.36 லட்சம்
Elevate Elite Pack ZX MT - ரூ.18.49 லட்சம்
Elevate Black Edition ZX MT - ரூ.18.61 லட்சம்
Elevate Signature Black Edition ZX MT - ரூ.18.89 லட்சம்
Elevate ADV Edition MT - ரூ.19.04 லட்சம்
Elevate ADV Edition MT Dual Tone - ரூ.19.28 லட்சம்
Elevate ZX CVT - ரூ.19.78 லட்சம்
Elevate Elite Pack ZX CVT - ரூ.19.98 லட்சம்
Elevate Black Edition ZX CVT - ரூ.20.10 லட்சம்
Elevate Signature Black Edition ZX CVT - ரூ.20.33 லட்சம்
Elevate ZX CVT Dual Tone - ரூ.20.45 லட்சம்
Elevate ADV Edition CVT - ரூ.20.48 லட்சம்
Elevate ADV Edition CVT Dual Tone - ரூ.20.73 லட்சம்
சிறப்பம்சங்கள்:
இந்த கார் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும், நெடுஞ்சாலையிலும் ஓட்டுவதற்கும் வசதியாக உள்ளது. 6 கியர்கள் வசதி உள்ளது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது. சன்ரூஃப் வசதி உள்ளது. ஹோண்டா எலிவேட் காரில் இருக்கைகளும் மிகவும் செளகரியமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடாஸ் வசதி உள்ளது. Collision Mitigation Braking System வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. ப்ரேக் அசிஸ்ட் வசதி உள்ளது. JNCAP வசதி 5 ஸ்டார் பாதுகாப்பு தரம் உள்ளது. கேபின் மிகவும் சிறப்பாக உள்ளது. நீலம், சிவப்பு, வெள்ளை, வெள்ளி நிறங்களில் உள்ளது.
ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷக், எம்ஜி ஹெக்டேர் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















