Royce Ghost Black Badge: அல்டிமேட் ராயல்.. அதகள வசதிகள்.. இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜ்.. சிறப்பம்சங்கள் என்ன?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜின் சிறப்பம்சங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜின் சிறப்பம்சங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
உலக அளவில் புகழ்பெற்ற கார் நிறுவனமாக அறியப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அதன் புதிய காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 44 ஆயிரம் கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ள இந்தக் காரானது, 45 கிலோ ப்ளாக் பெயிண்ட்டை கொண்டு வண்ணம் பூசப்பட்டு, ஹாண்ட் பாலிஷ் செய்யப்பட்டுள்ளது. இதை செய்ய 5 மணி நேரம் தேவைப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
13 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரில் 21 இன்ச் பைபர் வீல்கள் இடம்பெற்றுள்ளன. அருகில் கோச் லைனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு கோஸ்டை ஒப்பிடும் போது, இந்தக் காரின் இன்டீரியர் டிசைன் கொஞ்சம் வித்தியாசமாக டைமண்ட் பேட்டர்னில், கார்பன் மற்றும் மெட்டாலிக் ஃபைபர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.75 லிட்டர் V12 ட்வின் டர்போ என்ஜினை உள்ளடக்கிய இந்த காரானது 592 BHP பவரையும், 900 NM டார்க்கையும் கொண்டுள்ளது.இந்த காரின் சஸ்பென்ஸன் புதிய ஏர் ஸ்ப்ரிங், ஆல் வீல் ட்ரைவ், புதிய எக்ஸாஸ்ட், மற்றும் ஸ்டேரிங் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தியேட்டர் போன்ற உட்புறம், HUD டிஸ்பிலே, ADAS சிஸ்டம், மசாஜ் வசதி, ரெபிரிஜிரேட்டர் வசதி போன்ற பல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. லோ ட்ரைவ் மோட் வசதியும் இடம்பெற்றுள்ளதால் இதனை நாம் குறைந்த வேகத்தில் ஓட்ட முடியும். இந்தக் காரானது கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்