Hyundai Creta முதல் Mahindra BE 6 வரை.. வேகமாக சார்ஜ் ஏறும் EV கார்கள் இதுதான்
Fastest Charging Electric Midsize SUV: வேகமாக சார்ஜிங் வசதி கொண்ட மிட்சைஸ் எஸ்யூவி மின்சார கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Fastest Charging Electric Midsize SUV: இந்தியாவில் அனைவரும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் வசதிகளை அறிந்து மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார்களை தயாரித்து வருகின்றனர்.
மின்சார கார்கள் மைலேஜ், தரம், பாதுகாப்பு அம்சங்களை சிறப்பாக அளித்தாலும் அதன் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிருப்தியை உண்டாக்கிறது. இந்த சூழலில், விரைவாக சார்ஜ் ஏறும் வசதி கொண்ட மிட்சைஸ் எஸ்யூவி மின்சார கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1.Hyundai Creta Electric:
ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த கிரெட்டா கார். இதன் மின்சார படைப்புதான் Hyundai Creta Electric கார். இந்த கார் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு 4 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. 42 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இந்த காரில் 51.4 கிலோவாட் பேட்டரி கொண்ட காரும் உள்ளது.
அது சார்ஜ் ஆவதற்கு 5 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். 42 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 420 கி.மீட்டர் மைலேஜும், 51.4 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 510 கி.மீட்டர் மைலேஜும் தருகிறது. 42 கிலோவாட் பேட்டரி கொண்ட காரின் டிசி சார்ஜிங் நேரம் 58 நிமிடமும், 51.4 கிலோவாட் பேட்டரி கொண்ட காரின் சார்ஜிங் நேரம் 58 நிமிடமும் ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 18.02 லட்சம் முதல் ரூபாய் 23.67 லட்சம் வரை ஆகும்.
2. Tata Curvv EV:
டாடா நிறுவனத்தின் மின்சார கார்களில் அசத்தலான படைப்பு இந்த Tata Curvv EV ஆகும். இந்த காரில் 45 கிலோவாட் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட் உள்ளது. 45 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 10 சதவீதம் 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. டிசி சார்ஜிங் நேரம் 40 நிமிடம் ஆகும். 55 கிலோவாட் கொண்ட பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு 7.9 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் டிசி சார்ஜில் நேரம் 40 நிமிடம் ஆகும். 45 கிலோவாட் பேட்டரி 430 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 55 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 502 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் விலை ரூபாய் 17.49 லட்சம் முதல் 21.99 லட்சம் ரூபாய் வரை ஆகும்.
3. MG Windsor EV:
முன்னணி கார் நிறுவனமான எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார் இந்த MG Windsor EV ஆகும். இந்த கார் 38 கிலோவாட் பேட்டரி மற்றும் 52.9 கிலோவாட் பேட்டரியை கொண்டது. 38 கிலோவாட் பேட்டரி 100 சதவீதம் சார்ஜிங்கை எட்டுவதற்கு 7 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. டிசி சார்ஜிங்கில் 20 முதல் 80 சதவீதம் சார்ஜ் ஏறுவதற்கு நேரம் 45 நிமிடங்கள் ஆகும். 52.9 கிலோவாட் பேட்டரிக்கு 50 நிமிடங்கள் ஆகும். 38 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 332 கிலோமீட்டரும், 52.9 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 449 கிலோ மீட்டரும் மைலேஜ் தரும். இந்த காரின் விலை ரூபாய் 14 லட்சம் முதல் 18.39 லட்சம் வரை ஆகும்.
4. MG ZS EV:
எம்ஜி நிறுவனத்தின் மற்றொரு படைப்பு இந்த MG ZS EV ஆகும். இந்த கார் 50.3 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இந்த காரில் சார்ஜ் ஏறுவதற்கு 9 மணி நேரம் ஆகும். டிசி சார்ஜிங்கில் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் ஏறும். இதன் மைலேஜ் 461 கி.மீட்டர் ஆகும். இதன் விலை ரூபாய் 17.99 லட்சம் முதல் ரூபாய் 20.51 லட்சம் வரை ஆகும்.
5. Mahindra BE 6:
மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான மின்சார கார் இந்த Mahindra BE 6 ஆகும். இந்த காரில் 59 கிலோவாட் பேட்டரி மற்றும் 79 கிலோவாட் பேட்டரி உள்ளது. 59 கிலோவாட் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு 6 மணி நேரமும், 79 கிலோவாட் பேட்டரி சாரஜ் ஆவதற்கு 8 மணி நேரமும் ஆகும். டிசி சார்ஜிங்கில் 59 கிலோவாட் பேட்டரி 20 நிமிடத்திலும், 79 கிலோவாட் பேட்டரி 20 நிமிடத்திலும் சார்ஜ் ஏறும். 59 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 557 கிலோமீட்டரும் 79 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 683 கி.மீட்டரும் மைலேஜ் தருகிறது.





















