E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Electric Two Wheeler அக்டோபரில், தீபாவளி பண்டிகையொட்டி எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையானது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் , சமீபகாலமாக மின் வாகனங்களின் விற்பனையானது, தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக , குறைந்த தூரங்களின் பயணங்களாக பார்க்கப்படும் அலுவலகம், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு செல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது, அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதிகரித்த விற்பனை:
இந்நிலையில், அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக பைக்குகளின் விற்பனையானது கணிசமாக அதிகரித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த தருணத்தில், எந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் அதிகம் விற்பனையாகியுள்ளன என்றும், எவ்வளவு விற்பனையாகியுள்ளன என்றும் பார்ப்போம்.
முதலிடத்தில் ஓலா நிறுவனம்:
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதலிடத்தில் ஓலா நிறுவனம் உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் காரின் விற்பனையானது, பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 24,715 வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 41,606 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
அடுத்ததாக, டிவிஎஸ் மோட்டார் செப்டம்பர் மாதத்தில் 18,216 வாகனங்கள் விற்பனையாகிய நிலையில் அக்டோபரில் 29,912 வாகனங்கள் அதிகரித்து, விற்பனையில் 2ம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
3வது இடத்தில், பஜாஜ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது, செப்டம்பர் மாதத்தில் 19,196 ஸ்கூட்டர் விற்பனையாகிய நிலையில், அக்டோபர் மாதத்தில் 28,223 வாகனங்களாக விற்பனை அதிகரித்தது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின், செப்டம்பரில் 12,828 வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், அக்டோபரில் 15,991 வாகனங்கள் விற்பனை அதிகரித்தது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ வீலர் வாகன சந்தையானது அதிகரித்து கொண்டே வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், எரிபொருளினால் வெளியிடப்படும் புகையினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் எலக்ட்ரிக் பைக்குக்கு, மக்கள் மாறுவதை பார்க்க முடிகிறது.