IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது

டி20 உலகக்கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றி கடைசி போட்டியில் இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி, அரையிறுதிக்குச் செல்ல கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் இரு அணிகளும் மோதி வருகிறது.
நிதான தொடக்கம்:
இப்போட்டியில் முதலில் டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யக்குமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததார் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் களமிறங்கினர், இருவரும் பவர்பிளேயில் நிதானமாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தனர். 8வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஹோப் 32 ரன்களிள் கீளின் போல்டானார். இதன் பின்னர் ஷிம்ரன் ஹெட்மையர் களமிறங்கினார்.
அதிரடி ஆட்டம்:
சேஸ் மற்றும் ஹெட்மையர் ஜோடி அதிரடியில் இறங்கினர், அபாயகரமான பவுலரான வருண் சக்கரவர்த்தியின் 2வது ஓவரில் 17 ரன்கள் அடித்தனர். முதல் ஒன்பது ஓவர்கள் 69 ரன்கள் எடுத்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அடுத்த 11 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர் கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து எடுத்தனர் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மென்கள், மேற்கிந்திய தீவுகள் கடைசி ஐந்து ஓவர்களில் 75 ரன்கள் எடுத்தன. ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும், பவல் 19 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர்.
இந்த தரப்பில் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர், அதிகப்பட்சமாக ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதிகப்பட்ச சேசிங்:
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் சேசிங் வெறும் 158 ரன்கள் மட்டுமே. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 158 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் இந்தியா இங்கு அதிகபட்ச ரன் சேசிங் சாதனையையும் படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 196 ரன்களை சேஸ் செய்தால் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகப்பட்ச சேசிங்காக அமையும், இதற்கு முன்னர் 2014 உலகக்கோப்பையில் இந்திய அணி 174 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சேஸ் செய்தது.





















