BYD e6 Electric MPV Review | எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமா? கவனிக்கவேண்டியவை..
பிஒய்டி நிறுவனம் தன்னுடைய புதிய எலக்ட்ரிக் காரை அறிமுக செய்துள்ளது.

இந்தியாவில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப பல முன்னணி நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் இறக்கி வருகின்றனர். முதலில் ஓலா நிறுவனம் தன்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதன்பின்னர் தற்போது பிஒய்டி நிறுவனம் தன்னுடைய புதிய வகை எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
பிஒய்டி என்பது ‘பில்டு யுவர் ட்ரீம்ஸ்’ என்பது தான் சுருக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஒராண்டில் 1 மில்லியன் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்க களமிறங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே சீனாவில் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் விற்கும் நிறுவனமாக உள்ளது. தற்போது அந்த நிறுவனம் இந்தியாவிலும் கால்பாதிக்க உள்ளது. தன்னுடைய இ6 எம்பிவி என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இ6 எம்பிவி கார் என்பது ஏற்கெனவே உள்ள பெட்ரோ அல்லது டிசல் காரின் வடிவத்தை எலக்ட்ரிக்காக மாற்றியதல்ல. இது எலக்ட்ரிக் பயன்படுத்தி உபயோகம் செய்ய புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சுமார் 4,695mm நீளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது டயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரைவிட மிகவும் நீளமாக அமைந்துள்ளது.
அத்துடன் இந்த காரில் LED DRLs, 17இன்ச் வீல்கள் அமைந்துள்ளன. இந்த காரில் 5 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இதன் டாஸ் போர்டு பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம், வைஃபை வசதி மற்றும் 4 ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் டாப் ஸ்பீடாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம். இந்த காரில் வரும் பேட்டரிக்கு வாரண்டி 8 வருடம் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை போகும் வசதி உள்ளது.

இந்த காரின் ஆரம்பவிலை 29.16 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த கார் தற்போது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா,பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் தற்போது விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இந்தியாவில் அறிமுகமானது Kia Carens 7-சீட்டர் SUV..





















