Bajaj Pulsar NS400: பஜாஜின் மிகப்பெரிய பல்சர் பைக் இதுதான்..! மே 3ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது என்எஸ்400
Bajaj Pulsar NS400: பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் என்எஸ்400, வரும் மே மாதம் 3ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bajaj Pulsar NS400: பஜாஜ் பல்சர் என்எஸ்400 இதுவரை வெளியான, பல்சர் மாடல்களிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் NS400:
பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவின் அடையாளமாக இருப்பது பல்சர். செயல்திறன் மற்றும் வடிவமைப்பு என அனைத்து விதங்களிலும் இது பயனாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாகவே விற்பனையிலும் உச்சத்தை எட்டியது. இதனை தொடர்ந்து பல்சரின் பல்வேறு மேம்பட்ட எடிஷன்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட புதிய பல்சர் என்250 மாடலை, பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிய பல்சர் NS400 மாடலை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
பல்சரின் மிகப்பெரிய எடிஷன்:
பஜாஜ் நிறுவனம் இதுவரை வெளியான பல்சர் மாடல்களிலேயே, மிகப்பெரிய பல்சரை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிதான் புதிய பல்சர் என்எஸ் 400 மாடலை வரும் மே மாதம் 3ம் தேதி அந்நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை டோமினார் 400 மாடலை காட்டிலும், புதிய வாகனத்தின் விலை குறைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன் விலை தற்போது 2.31 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 40hp திறனை வெளிப்படுத்தும் மலிவு விலை வாகனமாக பல்சர் என்எஸ் 400 இருக்கும் என கருதப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
பஜாஜ் டோமினர் 400, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் 390 அட்வென்சர் ஆகிய மாடல்களி, பழைய 373சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு பைக்கையும் சார்ந்து 40-43.5hp ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதே இன்ஜின் தான் புதிய பல்சர் என்எஸ்400 மாடலிலும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.அதில் டோமினரை போன்று 40hp ஆற்றலை வெளிப்படுத்துமா அல்லது கேடிஎம் மாடலை போன்று 43.5 hp என்ற முழு ஆற்றலை வெளிப்படுத்துமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 6 ஸ்பிட் கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்ட் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் வ்ழங்கப்படுகிறது. குயிக்ஷிப்டர் இருக்குமா என்பது உறுதியாகவில்லை.
வடிவமைப்பு விவரங்கள்:
NS200 மாடலில் இருந்த சேஸிஸ் தான் புதிய பல்சர் மாடலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அது என்எஸ்200 மாடலின் 25hp ஆற்றலை விட கூடுதல் சக்தியை கையாள வல்லது என ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. 373cc இன்ஜினுக்கு ஏற்ப மேலும் வலுவூட்டப்படும் என தெரிகிறது. மேலும் டோமினரின் 193 கிலோ எடையை விட புதிய பலர்ச லேசானதாக இருக்கும் என கருதப்படுகிறது. டிசைன்கள சார்ந்து எந்தவித தகவலும் இல்லாவிட்டாலும், தற்போதைய என்எஸ் மாடல்களின் தோற்றம் பின்பற்றப்படும் என நம்பப்படுகிறது. USD ஃபோர்க் மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய எல்சிடி டேஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.