மேலும் அறிய

Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

Honda Activa Rival Scooter: இந்திய சந்தையில் ஸ்கூட்டர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு, போட்டியாக கிடைக்கும் 5 வாகனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Honda Activa Rival Scooter: ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு மாற்றாக இந்திய சந்தையில் கிடைக்கும் டாப் 4 ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆதிக்கம்:

சிறந்த வாகனம் என்ற பெருமையானது எரிபொருள் செயல்திறன், பொருட்களை வைப்பதற்கான இடம் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் இந்திய ஸ்கூட்டர் சந்தையின் சிறந்த மாடலாக ஹோண்டாவின் ஆக்டிவா, நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல்முறையாக வெளியிடப்பட்ட ஆக்டிவாவின் ஆறாவது தலைமுறை தற்போது விற்பனையில் உள்ளது. உதாரணமாக கடந்த ஓராண்டில் ஒவ்வொரு மாதமும் ஆக்டிவாவின் விற்பனை சராசரியாக 2 லட்சம் யூனிட்களை கடந்திருப்பது, அதன் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

ஆல்-ரவுண்டர் ஆக்டிவா ஸ்கூட்டர்

75 ஆயிரத்து 443 ரூபாய் என்ற தொடக்க விலையில் (எக்ஸ் - ஷோரூம்) கிடைக்கும் ஆக்டிவா ஸ்கூட்டரானது, நம்பகத்தன்மை, உலோக கட்டுமானம் மற்றும் அதிகப்படியான மறுவிற்பனை மதிப்பு கொண்டு சிறந்த ஆல்-ரவுண்ட் ஸ்கூட்டராக கொண்டாடப்படுகிறது. 110சிசி மற்றும் 125சிசி இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன், முன்புறத்தில் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷனையும் பெற்றுள்ளது. லிட்டருக்கு சுமார் 59 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், நிஜ உலகில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்சமாக 94 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். ஆக்டிவா 6ஜி மற்றும் 125சிசி மாடல்களில் சீட்டுக்கு அடியில், 18 லிட்டர் அளவிலான ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மோட்டர் சைக்கிளுக்கு இணையான வலுவான உழைக்கும் திறனை கொண்டு, இந்திய பயனர்களின் பிரதான தேர்வாக உள்ளது. அதேநேரம், பல்வேறு அம்சங்களில் ஆக்டிவாவிற்கு மாற்றாக இந்திய சந்தையில் கிடைக்கும் சில ஸ்கூட்டர்களும் உள்ளன.
Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

ஆக்டிவாவிற்கு டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள்:

1. சிறந்த 125சிசி ஸ்கூட்டர்

125சிசி இன்ஜின் ஆப்ஷனை கொண்டு சிறந்த செயல்திறனை வழங்கும் ஸ்கூட்டராக டிவிஎஸ் நிறுவனத்தின் NTORQ 125 மாடல் உள்ளது. ஸ்போர்டி டிசைன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, இந்த பிரிவிலேயே சிறந்த ஆக்சிலரேஷன் கொண்ட வாகனமாக உள்ளது. பூஜ்ஜியதித்திலிருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை 8.3 முதல் 8.9 விநாடிகளில் எட்டுகிறது எனவும், அதிகபட்சமாக 94 முதல் 98 கிலோ மீட்டர் வேகத்தில் (வேரியண்ட் அடிப்படையில்) பயணிக்கிறது. இருக்கைக்கு கீழே 20 முதல் 22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.8 லிட்டர் எரிபொருள் டேங்கை பெற்று, ஒரு லிட்டருக்கு 40 முதல் 50 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ.81,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

2. சிறந்த மைலேஜ் ஸ்கூட்டர்

மைலேஜ் அடிப்படையில் இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டராக யமாஹாவின் RayZR 125 Fi கருதப்படுகிறது. 5.2 லிட்டர் கொள்ளளவிலான எரிபொருள் டேங்கை கொண்டு, லிட்டருக்கு 71.33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிலையான வேகத்தை பின்பற்றினால் இது சாத்தியப்படுகிறது எனவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஹைப்ரிட் பவர் அசிஸ்டை கொண்டு 125சிசி இன்ஜின் மூலம், வலுவான செயல்திறன் வெளிப்படுத்துகிறது. லேசான எடை, செயல்திறன் சார்ந்த டிசைன் ஆகியவை RayZR 125 Fi மாடலை சிறந்த வாகனமாக மாற்றுகிறது. இருக்கைக்கு கீழே 21 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த மாடலின் விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.79,340 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

3. குடும்பங்களுக்கான சிறந்த ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் கிடைக்கும் குடும்பங்களுக்கான ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜுபிடர் 125 உள்ளது. இருக்கைக்கு கீழே 33 லிட்டர் அளவிலான ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. 5.1 லிட்டர் பெட்ரோல் டேங்கை கொண்டு, லிட்டருக்கு சுமார் 51 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. நடைமுறைக்கு உகந்தது, சொகுசு மற்றும் அதிகப்படியான ஸ்டோரேஜ் வசதி காரணமாக இது குடும்பங்களுக்கான வாகனமாக கொண்டாடப்படுகிறது. டிவிஎஸ் ஜுபிடர் 125 மாடலின் தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்) 76 ஆயிரத்து 200 ரூபாயில் தொடங்குகிறது.


Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

4. சிறந்த மின்சார ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த மின்சார ஸ்கூட்டர்களாக ஓலா S1 ப்ரோ மற்றும் ஏதர் 150X ஆகிய மாடல்கள் விளங்குகின்றன. முதலாவது 195 கிலோ மீட்டர் ரேஞ்ச் மூலமும், இரண்டாவது வலுவான கட்டமைப்பு மற்றும் எளிமையான கையாளுதலுக்காக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. இவற்றின் தொடக்க விலை முறையே ரூ.1,24,999 மற்றும் ரூ.1,47,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓலா S1 ப்ரோ மாடலின் மூன்றாவது தலைமுறையானது அதிகபட்சமாக மணிக்கு 128 முதல் 141 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இது சுமார் 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. ஏதர் 150X மாடலானது அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. 22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது.


Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

5. சிறந்த ப்ரீமியம் ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ப்ரீமியம் ஸ்கூட்டராக சுசூகி அக்செஸ் 125 மாடல் உள்ளது. பயன்பாட்டிற்கு மிகவும் ஏதுவாகவும், அதிநவீன வடிவமைப்பு, நேர்த்தியான ரெட்ரோ டிசைன், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் மென்மையான 125 சிசி இன்ஜின் உள்ளிட்டவை காரணமாக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ.77,684 (எக்ஸ் - ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் சூழலில், இருக்கைக்கு கீழே சுமார் 24.4 லிட்டர் கொள்ளளவிலான சேமிப்பு திறனை கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 95 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.


Activa Rival: ஒத்தையில சீன் போடும் ஆக்டிவா..! பட்ஜெட்டிலும், மைலேஜிலும் டஃப் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் - எது பெஸ்ட்

மேற்குறிப்பிடப்பட்ட 5 ஸ்கூட்டர்களும் தங்களுக்கான பிரிவில் தனித்துவமானதாகவும், சிறந்ததகாவும் விளங்குகின்றன. ஆனால், அந்த அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே அடக்கி ஈடு இணையற்ற நம்பகத்தன்மை, வலுவான செயல்திறன் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை கொண்டு ஸ்கூட்டர் உலகின் ராஜாவாக ஆக்டிவா திகழ்கிறது.

Frequently Asked Questions

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் சிறப்பு என்ன?

ஆக்டிவா ஸ்கூட்டர் நம்பகத்தன்மை, உலோக கட்டுமானம் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பால் ஆல்-ரவுண்டர் ஸ்கூட்டராக கொண்டாடப்படுகிறது. இது 110சிசி மற்றும் 125சிசி இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு மாற்றாக சிறந்த 125சிசி ஸ்கூட்டர் எது?

டிவிஎஸ் NTORQ 125 ஒரு சிறந்த 125சிசி ஸ்கூட்டர் ஆகும். இது ஸ்போர்டி டிசைன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் சிறந்த ஆக்சிலரேஷனை கொண்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த மைலேஜ் தரும் ஸ்கூட்டர் எது?

யமாஹா RayZR 125 Fi சிறந்த மைலேஜ் ஸ்கூட்டராக கருதப்படுகிறது. இது லிட்டருக்கு 71.33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர் எது?

டிவிஎஸ் ஜூபிடர் 125 குடும்பங்களுக்கான சிறந்த ஸ்கூட்டர் ஆகும். இது 33 லிட்டர் அளவிலான சேமிப்பு வசதி மற்றும் நல்ல மைலேஜை கொண்டுள்ளது.

சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள் யாவை?

இந்திய சந்தையில் ஓலா S1 ப்ரோ மற்றும் ஏதர் 150X சிறந்த மின்சார ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன. இவை முறையே 195 கிமீ மற்றும் 90 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியவை.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget