மேலும் அறிய

Hyundai Creta Facelift: ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் இந்த வருடம் விற்பனைக்கு வராது! க்ரெட்டா பிரியர்கள் ஏமாற்றம்!

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் அடுத்த வருடமே விற்பனைக்கு வரும் என்று காரின் டீசர் மூலம் தெரியவந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உள்ள க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்களையும், விபரங்களையும் இன்னும் சில மாதங்களில் வெளியிடவுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி மாடல் முதலாவதாக இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. முதன்முறையாக இந்தோனேசியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன்,இன்டிரியரில் கூடுதல் வசதிகளை பெற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்துதான் இந்தோனிஷியாவில் எஸ்யூவி கார்களை தயாரிக்க ஹூண்டாய் துவங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படங்கள் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்படும் க்ரெட்டா காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை ஓரளவிற்கு வெளிக்காட்டக்கூடியவைகளாக உள்ளன.

Hyundai Creta Facelift: ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் இந்த வருடம் விற்பனைக்கு வராது! க்ரெட்டா பிரியர்கள் ஏமாற்றம்!

இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் க்ரெட்டா மாடல் கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமாகி 1.5 வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போதும் அதிகளவில் விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. இதனால் அடுத்த 2022ஆம் ஆண்டு பாதி முடியும் வரையில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை இந்திய சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகே இந்திய சந்தைக்கு அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவை கொண்டுவர ஹூண்டாய் யோசிக்கும். இதற்குள் 2022ஆம் ஆண்டு முடியும் தருவாயில் வந்துவிடும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சான்டா க்ரூஸ் மற்றும் புதிய டூஸான் கார்களில் காணப்படுகின்ற அதே போன்ற கிரில் அமைப்பினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கிரெட்டா காரில் முன்புற பம்பர், ஹெட்லைட் அமைப்பில் மட்டும் சிறிய அளவில் மாற்றங்களை கொண்டிருக்கும். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன. க்ரெட்டாவின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்த அப்டேட்டின்படி கூடுதல் செவ்வகமான ஹெட்லேம்ப்கள் முந்தைய வெர்ஷனை காட்டிலும் சற்று கீழிறக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பம்பரில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது.

Hyundai Creta Facelift: ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிப்ட் இந்த வருடம் விற்பனைக்கு வராது! க்ரெட்டா பிரியர்கள் ஏமாற்றம்!

தற்போது விற்பனையில் உள்ள கிரெட்டா மற்றும் அல்கசார் போன்ற காரில் உள்ளதை போன்ற இன்டிரியரை கொண்டிருக்கின்றது. கூடுதலாக சில கனெக்கடிவ் வசதிகளை பெறுவது, இந்தோனேசியாவின் சந்தைக்காக ADAS நுட்பத்தை பெற வாய்ப்புள்ளது. இந்தோனேசியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமே இடம்பெறும். இந்தியாவில் தற்போது கிடைக்கின்ற என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது. 'பாராமேட்ரிக் க்ரில்' என்ற புதிய டிசைனிலான க்ரில் அமைப்பு காரின் முன்பக்கத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி டக்ஸனில் வழங்கப்பட்டிருக்கும் பாதி-கண்ணாடி வகையிலான எல்இடி டிஆர்எல்கள் புதிய க்ரெட்டாவில் வழங்கப்படுமா என்பதை இந்த டீசர் படங்களின் மூலம் அறிய முடியவில்லை. மேலும், 5-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளிலும் க்ரெட்டா இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை தற்போதுவரையில் ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. 5 இருக்கைகளுடன் தான் க்ரெட்டா உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இது நமக்கு பழக்கப்பட்டது தான். 7-இருக்கை க்ரெட்டாவே இந்தோனிஷிய வாடிக்கையாளர்கள் பலரை கவரும் என கூறப்படுகிறது. ஏனெனில் 7-இருக்கை கியா சொனெட்டை போன்று 7-இருக்கை க்ரெட்டாவின் பரிமாண அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் உட்புறத்தில் 7 இருக்கை வசதியினை ஹூண்டாய் நிறுவனம் கொடுக்கவுள்ளதாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget