Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுண்டர் முறையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
பாஜல் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகர ஆணையராக பதவி ஏற்றார் அருண் ஐபிஎஸ். சென்னை கமிஷனர் ஆக அவர் பதவியேற்ற பிறகு தொடர்ந்து ரவுடிகளை களையெடுக்கும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி ஆகியோரை தொடர்ந்து சீசிங் ராஜாவும் தற்போது என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த சீசிங் ராஜா நேற்றைய தினம் ஆந்திராவும் கடப்பாவை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஈசிஆரில் உள்ள அக்கறை அருகே அவர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த போலீஸ், ஆயுதங்களை பறிமுதல் செய்யும் நோக்கில் அந்த பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது காவல்துறையினரை திசை திருப்பி விட்டு, பதுக்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் சீசிங் ராஜா. அதில் இரண்டு குண்டுகள் காவல்துறையினரை வாகனத்தில் பாய, தற்காப்புக்காக சீசிங் ராஜாவை என்கவுண்டர் முறையில் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் இந்த என்கவுண்டர் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சீசிங் ராஜாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சீசிங் ராஜா என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.