ராக்கெட் வேகத்தில் விமான கட்டண உயர்வு!தவிக்கும் சென்னை மக்கள்! | Diwali Flight Ticket Hike
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு ரயில், பேருந்து , விமான செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டன. குறிப்பாக சென்னை வழித்தடங்களில் சாதாரண நாட்களுடன் ஒப்பிடும்போது, கட்டணங்கள் 4 முதல் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளன.
பண்டிகை காலம் என்பதாலும் முன்பதிவு தேவை அதிகரித்திருப்பதும், விமான இருக்கைகள் குறைவாக இருப்பதும் இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சென்னை – மதுரை:
சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129; இன்றைய கட்டணம் ரூ.17,683 வரை.
சென்னை – திருச்சி:
சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608; இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை.
சென்னை – கோவை:
சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351; இன்றைய கட்டணம் ரூ.17,158 வரை.
சென்னை – தூத்துக்குடி:
சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608; இன்றைய கட்டணம் ரூ.17,053 வரை.
சென்னை – டெல்லி:
சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933; இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை.
சென்னை – மும்பை:
சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356; இன்றைய கட்டணம் ரூ.21,960 வரை.
சென்னை – கொல்கத்தா:
சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293; இன்றைய கட்டணம் ரூ.22,169 வரை.
சென்னை – ஹைதராபாத்:
சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926; இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை.
சென்னை – கவுகாத்தி:
சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499; இன்றைய கட்டணம் ரூ.21,639 வரை.
பண்டிகைக்காலத்தைய விலையேற்றம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதாகவும், அரசு இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனர். விமான நிறுவனங்கள் “தேவை அதிகம் – இருக்கைகள் குறைவு” என்ற காரணத்தைக் கூறி தங்களது விலைகளை நியாயப்படுத்தினாலும், சாதாரண குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது.
பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் ரயில் டிக்கெட்டுகள் முன்பே முடிந்ததால், விமானப் பயணமே ஒரே வழியாக உள்ளது. ஆனால் கட்டண உயர்வு காரணமாக பலர் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.





















