Salem Drunkard News | தலைக்கேறிய போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் கஞ்சா போதையில் 20-ம் மேற்பட்ட வாலிபார்கள் வீட்டை அடித்து உடைத்து மேற்கூரைப் உள்ளே இறங்கி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி, பூசநாயக்கனூர் மேல்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தீபாவளியன்று மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வேறு பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் மது அருந்துவதும் பட்டாசு வெடித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த்தாக தெரிகிறது.
அதனை விஜய் தட்டி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்று 20க்கும் மேற்பட்டோருடன் மேல்காடு பகுதிக்கு சென்று விஜயின் வீட்டை தேடி உள்ளனர்.
தவறுதலாக அருகில் இருந்த புகைப்பட கலைஞர் சதீஷ் என்பவர் வீட்டுக்குள் சென்றதால், அவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த வீட்டின் கதவை சேதப்படுத்தியும், வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை உடைத்து உள்ளே இறங்கி சதீஷை கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது தடுக்க வந்த அப்பகுதியை சேர்ந்த மேலும் சிலர் மீது அந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மேல்காடு பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறும் போது, தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவர்கள் நிதானம் இழந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கஞ்சா போதையில் வாலிபார்கள் வீட்டை அடித்து நொருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















