மேலும் அறிய

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

விஸ்வகர்மா தொடர்பாக வானதி பேசிய வீடியோ சர்ச்சையாகியுள்ள நிலையில் இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது வானதி சீனிவாசன் திமுக எல்லாத்துலயும் சாதி முலாம் பூசுது என அதுகுறித்து காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

குலத்தின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் மட்டுமே பதவிகளை வழங்கி, “வாரிசு அரசியல்” செய்யும் @arivalayam, நலிவடைந்த  பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தின் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் சாதி சாயம் பூச முயல்வது கடும் கண்டனத்திற்குறியது.

கோவையில் நடந்த கைவினைக் கலைஞர்களுடனான சந்திப்பில், நமது பாரதப்பிரதமர் திரு. @narendramodi அவர்களும், நமது @BJP4India-வும் இந்தியக் கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை எவ்வாறு பாராட்டி போற்றுகிறார்கள் என்பதையும், நமது மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் “விஸ்வகர்மா” என்ற திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டை ஊக்குவிப்பதைப் பற்றியும், அதே சமயம் திமுக தனது அரசியல் ஆதாயங்களுக்காக அத்திட்டத்தின் பலன்கள் தமிழக கைவினைஞர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதைப் பற்றியும் மட்டும்தான் எனது உரையாடல் இருந்தது. 

அதில் “விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்தால், விஸ்வகர்மா என்ற சாதிப் பெயரில் நாங்கள் அடைபட்டுவிடுவோம், இதனால் எங்கள் சமுதாயம் பாதிப்படையும்” என்ற அச்சமுதாய மக்களின் கோரிக்கைகளுக்கு நான் அளித்த விளக்கத்தில் இருந்து ஒரு பாதியை மட்டும் வெட்டி எடுத்து வழக்கம் போல பொய் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். 

அனைத்திலும் சாதி முலாம் பூசி அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு வழக்கறிஞர் துறையை எனது தொழிலாக தேர்ந்தெடுத்த நான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயல்வது சற்றும் ஏற்புடையதல்ல.

தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தின் பலன்களைத் தமிழக மக்களுக்கு கிடைக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் திமுக, எங்கே தமிழக மக்களுக்கு உண்மை தெரிந்து நம்மை கேள்வி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் எனது பேச்சை மடை மாற்றி சாதிய வன்மத்தை தூண்ட முயற்சிக்கிறது.

காரணம், விவசாய குடும்பத்தை சார்ந்த எனக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பினை நல்கியதே, @BJP4India குலத்தொழிலை மட்டும்தான் ஒருவர் செய்ய வேண்டும் என ஒருநாளும் வற்புறுத்துவதில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.

எனவே, காலங்காலமாக சாதியையும் மதத்தையும் வைத்து மக்களைப் பிளவுண்டு அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நமது தேசத்தின் பொக்கிஷங்களான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்திலும் அதே உத்தியைக் கடைபிடிக்க வேண்டாம் என்றும், நீங்கள் எவ்வளவுதான் பொய் பிரச்சாரத்தை பரப்பினாலும் உண்மையை மக்களுக்கு நாங்கள் எடுத்துரைப்போம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் வீடியோக்கள்

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget