மேலும் அறிய

Karnataka Reservation Bill | ”கன்னடர்களுக்கே கர்நாடகவில் வேலை” சித்தராமையா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடக வேலை கன்னடர்களுக்கே என்னும் விதமாக, ஒரு புதிய சட்டமசோதாவை கொண்டுவந்துள்ளது கர்நாடக அரசு, அது நிறைவேறும் பட்சத்தில் இனி கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் பெருமளவில் கன்னடர்களையே பணியமர்த்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது..

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய முயர்ச்சியை கையிலெடுத்துள்ளது. அது தான் கன்னட மக்களின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் கர்நாடக தனியார் நிறுவனங்களில், கன்னடர்களையே பணியமர்த்துவதற்கான சட்ட மசோதா. இந்த மசோதாவை பொறுத்த அளவில், தனியார் நிறுவனங்களில் நிர்வாக பொறுப்பில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவீதமும் கன்னடர்களயே பணியமர்த்த வேண்டும், இது தான் அந்த சட்டமசோதாவின் முக்கிய சாராம்சம்.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும்  குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பணிகளில் 100 சதவீதமும் கன்னடர்களை தான் பணியமர்த்த முடியும் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டிருந்தார், ஆனால் அதை சிறுது நேரத்திலேயே  அவர் டெலிட் செய்தார். 

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும் வகையில் மேனேஜரியில் ரோலில் 50 சதவீதமும், நான் மேனேஜிரியல் ரோலில் 50 சதவீதமும் அளிக்கும் இந்த மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாளை கர்நாடக சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டம் அமலுக்கு வரும் சூழலில், எந்த நிறுவனம் இதை பின்பற்றவில்லையோ அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், ஒரு வேலை அதன் பின்னும் இந்த விதிமீறல் தொடர்ந்தால் ஒவ்வோரு நாளும் 100 ரூபாய் விதம் அபராதம் விதிக்கலாம் என்று அந்த சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பலை கர்நாடகாவில் கிளம்பியுள்ளது, பெங்களூரு போன்ற தொழில் நகரங்களில் கன்னடர்களுக்கு சரிசமமாக வெளி மாநிலத்தை சேர்ந்த பணியார்க்ளும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் பலர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு கர்நாடகாவிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படலாம் என சமூக செயல்பாட்டாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தொழில்துறை நிறுவனங்களுக்குமே இது சிக்கல் தான் என்பதால் தனியார் நிறுவங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தொழிலாளர் நலத்துறையால் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தொழில்துறை நிறுவனங்களுடன் பேசி ஆசோசனை செய்த பின்பே, சட்டம் கொண்டுவரப்படும். அதனால் யாரும் பயபட வேண்டாம் என்று அமைச்சர் பிரியங்க் கார்க்கே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில், கன்னட கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் சட்டமன்றத்தில், மாநிலத்தில் செயல்படும் அனைத்து MNC நிறுவனங்களும் பணிபுரியும் கன்னடர்களின் எண்ணிக்கையை அறிவிப்புப் பலகைகளில் காட்ட வேண்டும், தவறினால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்றும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கன்னடர்களுக்கான அரசாக பிராண்டிங் செய்ய முயலும் சித்தராமைய்யா அரசின் அடுத்து மூவ் தான் இந்த மசோதா. ஏனினும் ஏற்கனவே குஜராத் போன்ற பல மாநிலங்களில் இந்த சட்டம் கொண்டுவர முயற்ச்சி செய்யப்பட்ட போது, இந்தியர்களில் அடிப்படை உரிமைகளை இந்த சட்டம் பாதிப்பதாக கூறி நீதிமன்றம் இந்த சட்டங்களை நீக்கியது. இந்நிலையில் கர்நாடக அரசின் இந்த முயற்ச்சி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் வீடியோக்கள்

TVK Vijay : முதல் மாநாட்டில் சிக்கல்?விஜய் ப்ளான் நடக்குமா? பரபரக்கும் TVK
TVK Vijay : முதல் மாநாட்டில் சிக்கல்?விஜய் ப்ளான் நடக்குமா? பரபரக்கும் TVK
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS : ஓபிஎஸ் எங்கே.? தற்போது என்ன செய்கிறார்.? தோப்பு தனிமரமானதா..!
OPS: ஓபிஎஸ் எங்கே.? தற்போது என்ன செய்கிறார்.? தோப்பு தனிமரமானதா..!
"எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!
Thangalaan : தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
Thangalaan : தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம் 
ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : முதல் மாநாட்டில் சிக்கல்?விஜய் ப்ளான் நடக்குமா? பரபரக்கும் TVKUdhayanidhi stalin : துரைமுருகனா? உதயநிதியா? 17 நாட்கள் பொறுப்பு யாருக்கு? ஸ்டாலினின் ப்ளான்Siddaramaiah CM issue : சவால்விட்ட சித்தராமையா! கடுப்பில் காங்கிரஸ்! WARNING யாருக்கு?Duraimurugan vs Rajinikanth : வீட்டுக்கே வந்த துரைமுருகன்! சமாதானப்படுத்திய ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS : ஓபிஎஸ் எங்கே.? தற்போது என்ன செய்கிறார்.? தோப்பு தனிமரமானதா..!
OPS: ஓபிஎஸ் எங்கே.? தற்போது என்ன செய்கிறார்.? தோப்பு தனிமரமானதா..!
"எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!
Thangalaan : தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
Thangalaan : தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம் 
ஓசூர் டாடா நிறுவனத்தில் உத்தரகாண்ட் பெண்களுக்கு வேலை; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- ராமதாஸ் கண்டனம் 
ADMK Protest :
ADMK Protest : "தஞ்சாவூரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம் போர்க்களமானது" பெண் போலீசுக்கு கையில் ரத்த காயம்!
உயிர்களை பறித்த அதிவேகம்.. வயக்காட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் உயிரிழந்த சோகம்
உயிர்களை பறித்த அதிவேகம்.. வயக்காட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் உயிரிழந்த சோகம்
Ponn Manickavel :
Ponn Manickavel : "கைதாகிறாரா பொன் மாணிக்கவேல்” உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்..!
Zaheer Khan - LSG : லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்..!: இனி வேறமாறிதான்..!
லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்..!: இனி வேறமாறிதான்..!
Embed widget