முன்னணி பிரபலத்தின் இயக்கத்தில் ஹீரோவாகும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்!
பிக்பாஸ் பிரபலங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு குவிந்து வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னரான முத்துகுமரனுக்கும் இப்போது சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது.

முக்கிய பிரபலம் ஒருவரின் படத்தில் முத்துக்குமரன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நோக்கத்தில் அனைவரும் கலந்து கொண்டாலும், இதில் பெரும்பாலவர்களின் எண்ணம், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி அப்படியே திரையுலக வாய்ப்பை பெறவேண்டும் என்பதே.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் திரையுலக வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறிய ஆரவ், ஹரீஷ் கல்யாண், வனிதா விஜயகுமார், லாஸ்லியா, முகென் ராவ், பாலாஜி முருகதாஸ், ரைசா வில்சன், சாக்ஷி அகர்வால், தர்ஷன், பிக்பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் இன்று திரைப்படங்களில் நடிக்க காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது மறுக்க முடியாத உண்மை.
கூத்து கலைஞரான தாமரை செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவரின் வாழ்க்கையே மாறியது. தற்போது விஜய் டிவியில் முக்கிய சீரியலில் நடித்து வருகிறார். அதே போல் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டிய முத்துக்குமரன், டைட்டில் வின்னராக மாறினார். மேலும், அவருக்கு ரூ.40,50,000 பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பணப்பெட்டியிலிருந்து ரூ.50,000 எடுத்து வந்தார். இதோடு பைக் உள்ளிட்ட சில பரிசுகளும் வழங்கப்பட்டன.
தற்போது அவர் ஜிமிமில் பயிற்சிபெறும் சில வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இப்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சமுத்திரக்கனி மூலமாக சினிமாவில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை சமுத்திரக்கனி தான் இயக்க உள்ளாரார் என்கிற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் எந்த அளவிற்கு அவருக்கு ஆதரவு கொடுத்தார்களோ அதே அளவிற்கு படத்துக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாராம். இவரது கனவு நிறைவேறுமா? முத்துக்குமரன் நடிகராக ஜொலிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

