மேலும் அறிய
Tamilnadu Roundup : டாஸ்மாக் அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை.. திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல! - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

முக்கிய செய்திகள்
Source : ABP Live
- சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
- "திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல. வலிந்து திணிக்கும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
- தவெக சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார்
- மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மகளிருக்கான பிங்க் நிற மகளிர் ஆட்டோ சேவையை துவக்கி வைக்க உள்ளார் முதலவ்ர் ஸ்டாலின்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் நடிகை அமலாபால்
- கோடைக்காலம், பட்ஜெட், பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டுதடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு.
- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஓலப்பாளையத்தில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில், சென்னியப்பன் என்பவருக்குச் சொந்தமான 18 ஆடுகள் உயிரிழந்தன.
- தீட்சிதர்கள் மீதான குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு - தமிழ்நாடு காவல்துறை எதிர்ப்பு
- உதகை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பேருந்தை சாமர்த்தியமாக வனப் பகுதிக்குள் விட்டு 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சகத்தின் கீழ் வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு..!
- திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது
- ஜி.வி பிரகாஷ்-திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















