ஆளுக்கு பாதி பாதி! DEAL-ஐ முடித்த அமித்ஷா! இறங்கிவந்த நிதிஷ் குமார்
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுக்கான டீலை முடித்துள்ளார் அமித்ஷா. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலை விட குறைவாக தொகுதிகளில் போட்டியிட 2 கட்சிகளும் இறங்கிவந்துள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் வம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 17ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில், அமைச்சர் அமித்ஷா டீலை முடித்துள்ளார். இன்று அமித்ஷா தலைமையில் நடந்த மீட்டிங்கில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
அந்தவகையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சிக்கு 29 தொகுதிகளும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் அதிக தொகுதி கேட்டு போர்க்கொடி தூக்கி வந்தன. லோக் ஜனசக்திக்கு 40 தொகுதி கேட்ட சிராக் பஸ்வானுடன் பாஜக் பேச்சுவார்த்தை நடத்தி 29 தொகுதிகளுக்கு டீலை முடித்துள்ளது.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியும் 15 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்த நிலையில் 6 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளார். இப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லாமல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என மும்முரமாக வேலை பார்த்து வருகிறார் நிதிஷ் குமார்.
அதனால் கடந்த முறையை விட குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு இறங்கி வந்துள்ளார். அதேபோல் பாஜகவும் கூட்டணிக்குள் பிரச்னை வரக்கூடாது என்ற நோக்கத்தில் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் ஒரே அளவிலான தொகுதிகளை கொடுத்துள்ளது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளுலும் வெற்றி பெற்றது.
அதனால் இந்த முறை ஐக்கிய ஜனதா தளத்திற்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது என பீகார் பாஜகவினர் முனுமுனுத்த நிலையில், கூட்டணிக்குள் பிரச்னை வரக் கூடாது என்பதற்காக நிதிஷ் குமாரிடம் பேசி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்துள்ளது பாஜக.





















