மேலும் அறிய

234 தொகுதிகளிலும் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும்: அர்ஜுன் சம்பத் சொல்கிறார்

தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீச தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்த கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம்.

தஞ்சாவூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சியின் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சாய்ரகு தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கணேசன், மாநகர செயலாளர் சதீஷ்குமார், இளைஞரணி செயலாளர் சுபாஷ், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்கள் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் சென்னையில் மார்ச் 15-ந்தேதி தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு மாநாட்டினை நடத்த உள்ளோம். தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இதனை எதிர்த்தன. ஆனால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த தேர்தல்ல பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் நடத்தை விதிமுறைகள் வரும். ஆனா தேர்தல் ரொம்ப பக்கமா அறிவிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் சின்னங்களை வரைந்து தேர்தல் பிரச்சாரங்களைத் துவக்கி விட்டார்கள். தேர்தல் மாநாடுகள், பேரணிகளை நடத்துகிறார்கள். வாக்கு சேகரிக்கிறாங்க. தற்போது தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.

கேரள மாநிலத்தில் 'நவ கேரளம்'  என்று இதே மாதிரி வீடு வீடாகச் சென்று தேர்தல் பணிகளை அரசு அதிகாரிகள் மூலம் செய்ய முயற்சித்த போது நீதிமன்றம் அதைத் தடை செய்துள்ளது. அதேபோல் இங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்', 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று இப்போ வீடு வீடாக அவங்க தேர்தல் பணிகளை அரசு அதிகாரிகள் மூலமாக செய்கிறார்கள். கேரள மாநிலத்துல நீதிமன்றம் தலையிட்டு தடை விதித்ததோ அதேபோல் தமிழகத்திலும் நீதிமன்றம் தலையிட்டு அரசு அதிகாரிகளை தேர்தல் பணிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீச தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்த கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. கரூர் சம்பவத்தில் அவர் முறையாக செயல்படவில்லை. எனவே அவரை நம்பி இளைஞர்கள் ஏமாறக்கூடாது. விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை கிடையாது. அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் டெபாசிட் இழக்கும். சட்டசபை தேர்தலுக்குப்பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்று விடுவார். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Embed widget