Aadhav Arjuna Joined TVK | தவெக-வில் இணையும் ஆதவ்?விஜய்யின் MASTER PLAN! சந்திப்பில் நடந்தது என்ன?
ஆதவ் அர்ஜூன தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை 1 ர் 2ர் நாட்களில் விஜய் அற்விக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் தற்போது தீவிர அரசியல் களத்தில் களமிறங்கியுள்ளார். விஜய்யுடன் தொடக்கம் முதலே கூட்டணி சேர மிகுந்த ஆர்வம் காட்டி வந்தவர் ஆதவ் அர்ஜுனா. தமிழக வெற்றிக்கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணி வைக்க முழு மூச்சில் பணியாற்றியதாக கூறப்பட்டது.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் விசிக இருந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், விசிக-வில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்த நிலையில் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - தவெக கைகோர்க்க உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக விஜய்யின் தவெக-விற்கு ஆலோசகராக ஆதவ் அர்ஜுனா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு விஜய்யின் செயல்பாடுகள் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையின் அடிப்படையில் இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் விஜய்க்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க.வை வீழ்த்த விஜய்யை மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக மாற்ற ஆதவ் அர்ஜுனா தொடக்கம் முதலே தீவிரமாக பணியாற்றி வந்தார். தற்போது விஜய்யின் ஆலோசனையில் அவரது நிறுவனம் இயங்க உள்ளதால் அதிமுக -தவெக கூட்டணி ஏற்பட பேச்சுவார்த்தைகள் இன்னும் விறுவிறுப்பாக நடக்கும் என்றே கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், விஜய் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே பலரும் கணித்துள்ளனர். கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பை விஜய் வழங்குகிறார் என்று தகவல் வெளியான நிலையில் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் ஆளுங்கட்சியான தி.மு.க. மட்டுமின்றி ஒவ்வொரு கட்சியினராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.





















